டாக்ஸி ஓட்டும் காதல் கொண்டேன் ஆதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள் – வைரலாகி வரும் பதிவு இதோ..

காதல் கொண்டேன் பட நடிகர் சுதீப் சாரங்கியின் தற்போதைய நிலை வைரல் பதிவு உள்ளே -  Kaadhal konden actor Sudeep sarangi current status | Galatta

கடந்த 2003 ல் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘காதல் கொண்டேன்’ தனுஷ் கதாநாயகனாக நடித்து வெளியான இந்த திரைப்படம் தனுஷ் அவர்களின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இந்த படத்திற்கு பின்பே தனுஷ் அவர்களுக்கு தமிழ் சினிமாவில் வாய்புகள் குவிய தொடங்கியது. அதே போல் இயக்குனர் செல்வராகவன் அவர்களுக்கும் இந்த படம் மிக முக்கியமான திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான பாடல்கள் இப்படத்திற்கு மிகப்பெரிய பலம். இந்த படத்தின் பாடல்களே காதல் கொண்டேன் படத்திற்கு விளம்பரமாக அமைந்தது. இப்படத்தில் தனுஷ் அவருடன் இணைந்து சோனியா அகர்வால், சுதீப் சாரங்கி, நாகேஷ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். இப்படத்தின் மூலம் தனுஷ், சோனியா அகர்வால், யுவன் ஷங்கர் ராஜா மற்றும் செல்வராகவன் வரிசையில் கவனம் பெற்றவர் காதல் கொண்டேன் படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்த சுதீப்.

முதல் படத்திலே கதாநயகனுக்கு நிகரான காட்சிகள் கொண்டு அமைந்த காதல் கொண்டேன் படத்தில் இளமை துள்ளும் நாயகனாக அறிமுகமானவர் சுதீப் சாரங்கி. முதல் படத்தில் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பிற்கு பின் சுதீப் தமிழில் என்னவோ பிடிச்சிருக்கு, காதலே ஜெயம் ஆகிய படங்களில் நடித்தார். காதல் கொண்டேன் படத்திற்கு கிடைத்த வரவேற்பு இந்த படங்களுக்கு கிடைக்காமல் தமிழ் சினிமாவை விட்டு விலகினார். அதன்பின் பெங்காலி, இந்தியில் சில படங்களில் நடித்தார். அதிலும் சரியான வரவேற்பு கிடைக்காமல் இருந்த சுதீப் காலப் போக்கில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். அதன்படி பல நெடுந்தொடர்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் இணையத்தில் நடிகர் சுதீப் சாரங்கி டேக்ஸி டிரைவர் கோலத்தில் உடல் பொலிவிழந்து டாக்ஸி நிற்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. காதல் கொண்டேன் ஹீரோ டாக்ஸி ஓட்டுகிறாரா என்று தமிழ் ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள்.. பின் தொடர்ந்து என்ன நேர்ந்தது என்று கேள்விகளுடன் சுதீப் சாரங்கி புகைப்படத்தை வைரலாக்கினார்.

ashok selvan sarath kumar starrer por thozhil thriller sneak peek out now

இது தொடர்பாக சிலர் சுதீப் சாரங்கி சமூக தளத்தில் நீங்கள் காதல் கொண்டேன் படத்தில் நடித்தவர் தானே என்ற கேள்வியையும் எழுப்பி வந்தனர். பின் சுதீப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், காதல் கொண்டேன் பட காட்சி ஒன்றை பகிர்ந்து, “இந்த புகைப்படத்தை பகிர்ந்ததற்கு நன்றி. இது ஒரு அற்புதமான தருணம். காதல் கொண்டேன் எனது முதல் திரைப்படம். நான் என்றும் தமிழ் சினிமாவிற்கு நன்றியுடன் இருப்பேன்.” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதையடுத்து சுதீப் அவர்களின் பதிவு இணையத்தில் வைரலானது.

மேலும் அவர் டேக்ஸி டிரைவர் உடையில் இருந்த புகைப்படம் ஒரு விளம்பர படத்தில் நடிக்கும் கதாபாத்திரத்திற்கானது என்று விளக்கமும் அளித்துள்ளார். இதையடுத்து அவரது பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

A post shared by Sudeep Sarangi (@sudeep.sarangi)

“சில முறை மட்டுமே சந்திக்க முடியும்..” திருமண நாளில் ரகசியத்தை பகிர்ந்த பிரபல பாடகர் பென்னி தயாள் மனைவி.. – வைரலாகும் பதிவு உள்ளே...
சினிமா

“சில முறை மட்டுமே சந்திக்க முடியும்..” திருமண நாளில் ரகசியத்தை பகிர்ந்த பிரபல பாடகர் பென்னி தயாள் மனைவி.. – வைரலாகும் பதிவு உள்ளே...

ஜிகர்தண்டா படத்தில் விஜய் சேதுபதி வருவாரா? கேள்விக்கு பதிலளித்த கார்த்திக் சுப்பராஜ் - சுவாரஸ்யமான Exclusive Interview இதோ..
சினிமா

ஜிகர்தண்டா படத்தில் விஜய் சேதுபதி வருவாரா? கேள்விக்கு பதிலளித்த கார்த்திக் சுப்பராஜ் - சுவாரஸ்யமான Exclusive Interview இதோ..

கார் வாங்கிய 3 நாட்களிலே நடந்த சம்பவம்.. விரக்தியில் மாநாடு பட ஒளிப்பதிவாளர் எடுத்த முடிவு .. - விவரம் உள்ளே..
சினிமா

கார் வாங்கிய 3 நாட்களிலே நடந்த சம்பவம்.. விரக்தியில் மாநாடு பட ஒளிப்பதிவாளர் எடுத்த முடிவு .. - விவரம் உள்ளே..