சீயான் விக்ரமின் துருவ நட்சத்திரம் பட புது ட்ரெய்லர் & ரிலீஸ் திட்டம் பற்றிய அதிரடி தகவல்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சீயான் விக்ரமின் துருவ நட்சத்திரம் பட புது ட்ரெய்லர் & ரிலீஸ் திட்டம்,Chiyaan vikram in dhruva natchathiram new trailer and release plan | Galatta

தமிழ் சினிமாவின் நடிப்பின் அசுரனாக திகழும் சீயான் விக்ரம் கடைசியாக இயக்குனர் மணிரத்னம் தனது கனவு படமாக இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் எனும் அட்டகாசமான கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து அனைத்து ரசிகர்களின் இதயங்களையும் கொள்ளையடித்தார். அடுத்ததாக முதல் முறை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்து வருகிறார். 1800-களின் காலகட்டத்தில் நடைபெறும் பீரியட் திரைப்படமாக கேஜிஎஃப் கதை களத்தை மையப்படுத்தி பிரம்மாண்டமாக 3D தொழில்நுட்பத்தில் தயாராஏகும் தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக தங்கலான் படத்திற்கான ஒத்திகையின் போது ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக தற்போது ஓய்வு எடுத்து வரும் சீயான் விக்ரம் விரைவில் படப்பிடிப்பில் இணைய இருக்கிறார். இறுதிக்கட்டத்தில் இருக்கும் தங்கலான் படப்பிடிப்பில் இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மிச்சம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சீயான் விக்ரம் - இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் பக்கா ஸ்டைலான ஆக்சன் திரில்லர் படமாக தயாராகி நீண்ட காலமாக ரிலீசுக்கு காத்திருக்கும் திரைப்படம் தான் துருவ நட்சத்திரம். ஒன்றாக என்டர்டைன்மென்ட், கொண்டாடுவோம் என்டர்டைன்மென்ட் & எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க, கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் சீயான் விக்ரமுடன் இணைந்து ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளாக நடிக்க, இயக்குனர் பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி-DD , விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா, சதீஷ் கிருஷ்ணன், முன்னா சைமன், மாயா கிருஷ்ணன், அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு தயாராகிய துருவ நட்சத்திரம் திரைப்படம் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு நின்றது. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழித்தும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வம் மட்டும் இப்போதும் குறையவில்லை. ஒவ்வொரு முறை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் போதும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த கேள்விகள் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு கொண்டு தான் இருந்தன. துருவ நட்சத்திரம் திரைப்படத்தை, கடந்த ஆண்டு(2022) தனது இயக்கத்தில் சிலம்பரசன்.TR நடித்து வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு விரைவில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்திருந்தார். சமீபத்தில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றதாகவும் தொடர்ந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் அறிவித்தனர். 

இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தை வருகிற ஜூலை 14ஆம் தேதி வெளியிடப் படக் குழுவினர் திட்டமிட்டிருப்பதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. முன்னதாக வரும் ஜூன் 17ஆம் தேதி மலேசியாவில் நடைபெற இருக்கும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் புதிய ட்ரெய்லர் ஒன்றையும் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஆர்யாவின் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் ஸ்பெஷல் ட்ரீட்… ரொமான்டிக்கான கறிக்கொழம்பு வாசம் வீடியோ பாடல் இதோ!
சினிமா

ஆர்யாவின் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் ஸ்பெஷல் ட்ரீட்… ரொமான்டிக்கான கறிக்கொழம்பு வாசம் வீடியோ பாடல் இதோ!

புதிய படத்தை பூஜையுடன் தொடங்கிய விக்ரம் பிரபு... வைரலாகும் படப்பூஜை புகைப்படங்கள் இதோ!
சினிமா

புதிய படத்தை பூஜையுடன் தொடங்கிய விக்ரம் பிரபு... வைரலாகும் படப்பூஜை புகைப்படங்கள் இதோ!

SJசூர்யாவின் பொம்மை படத்திற்காக ஒன்றிணைந்த லோகேஷ் கனகராஜ் - பிரதீப் ரங்கநாதன்... காரணம் என்ன? ட்ரெண்டிங் வீடியோ இதோ
சினிமா

SJசூர்யாவின் பொம்மை படத்திற்காக ஒன்றிணைந்த லோகேஷ் கனகராஜ் - பிரதீப் ரங்கநாதன்... காரணம் என்ன? ட்ரெண்டிங் வீடியோ இதோ