“நான் பண்ண தப்புக்கு நடுரோட்டில் நின்னேன்..” முதல் முதலில் ஈரோடு மகேஷ் பகிர்ந்த தகவல் – வைரல் வீடியோ உள்ளே..

மறக்கமுடியாத தருணம் குறித்து மனம் திறந்த ஈரோடு மகேஷ் வீடியோ உள்ளே - Erode Mahesh shares fun filled interesting  childhood incident | Galatta

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராகவும் நடுவராகவும் பங்களித்து மக்களின் மனதை கவர்ந்த தொகுப்பாளர் ஈரோடு மகேஷ். தமிழில் சிறந்த தொகுப்பாளர்களில் பட்டியலில் மிக முக்கியமான இடம் வகித்து வருகிறார் ஈரோடு மகேஷ். இவர் தொகுத்து வழங்கிய கலக்க போவது யாரு, தமிழ் பேச்சு எங்கள் மூச்சு, நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம் போன்ற  நிகழ்சிகள் மிகப்பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சி  தொகுப்பாளராகவும் மேடை பேச்சாளராகவும் மட்டுமின்றி திரைத்துறையில் சில படங்களில் ஈரோடு மகேஷ் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது 15 ஆண்டுகால தொலைக்காட்சி பயணத்தை கொண்டாடும் விதமாக நமது கலாட்டா தமிழ் சிறப்புநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஈரோடு மகேஷ் கலந்து கொண்டு தனது பயணம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.  இந்த நிகழ்வில் ஈரோடு மகேஷ் அவர்கள் தனது குடும்பத்தாருடன் கலந்து கொண்டார். இதில் ஒரு தனி நிகழ்வாக ஈரோடு மகேஷ் அவர்களின் அப்பா மற்றும் அம்மா கலந்து கொண்டு ஈரோடு மகேஷ் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

அதில் ஈரோடு மகேஷ் தந்தை அதிகம் கண்டித்த சம்பவம் குறித்து கேட்கையில், அவர் பேசியது, அப்பா எங்களை அடிக்கலாம் மாட்டார்.‌ஆனா பார்த்தாலே பயத்துல பாத்ரூம் போயிடுவோம். அவ்ளோ கண்டிப்பு.. சின்ன வயசு அப்போ எதிர்த்தவீட்டில் தாமிர காசு வெச்சிருந்தாங்க.. நான் அதுல கொஞ்சம் எடுத்துட்டு பாக்கெட் ல போட்டு வந்தேன். அந்த சத்தம் கேட்டு அப்பா கேட்டார். ஏது ன்ட்டு.நான் அதை சொன்னேன்..  நிறைய இருந்துச்சு எடுத்துட்டு வந்தேன்னு சொன்னேன்.

அவர் நிறைய வெச்சிருந்தாலும் அது அடுத்தவங்களோடது னு சொன்னார். அது தப்புன்னு  சொல்லி என்னை கூட்டு போய் நடு ரோட்டுல நிக்க வெச்சிட்டார். அந்த பக்கம் பஸ் வந்துட்டு இருக்கு.. பயமா இருக்கு னு அழுதேன். அப்பறம் தான் அப்பா கூப்டு சொன்னார்.‌ அடுத்தவங்க காசுக்கு ஆசை படுறதும் எடுக்குறதும் ரொம்ந தப்பு னு சொன்னார். அது எனக்கு மிகப்பெரிய பாடம்.‌ இன்னிக்கு வரைக்கும் அந்த விஷயத்துல நான் ஒழக்கமா இருக்கேன். அதுக்கு அம்மா தான் காரணம்.” என்றார் ஈரோடு மகேஷ்.

மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை ஈரோடு மகேஷ் பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..

 

டாக்ஸி ஓட்டும் காதல் கொண்டேன் ஆதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள் – வைரலாகி வரும் பதிவு இதோ..
சினிமா

டாக்ஸி ஓட்டும் காதல் கொண்டேன் ஆதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள் – வைரலாகி வரும் பதிவு இதோ..

கொலை.. கடத்தல்.. கிரைம்.. மிரட்டும் காட்சியை வெளியிட்ட அசோக் செல்வனின் ‘போர் தொழில்’ படக்குழு – வைரல் வீடியோ உள்ளே..
சினிமா

கொலை.. கடத்தல்.. கிரைம்.. மிரட்டும் காட்சியை வெளியிட்ட அசோக் செல்வனின் ‘போர் தொழில்’ படக்குழு – வைரல் வீடியோ உள்ளே..

சித்தார்த்தின் வெறித்தனமான நடிப்பில் ‘டக்கர்’.. அட்டகாசமான சிறப்பு காட்சியை வெளியிட்ட படக்குழு – வைரல் வீடியோ உள்ளே..
சினிமா

சித்தார்த்தின் வெறித்தனமான நடிப்பில் ‘டக்கர்’.. அட்டகாசமான சிறப்பு காட்சியை வெளியிட்ட படக்குழு – வைரல் வீடியோ உள்ளே..