இந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் சிறந்த நடிகைகளில் ஒருவராக தொடர்ந்து பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன் அடுத்ததாக தமிழில் யாமிருக்க பயமே மற்றும் கவலை வேண்டாம் ஆகிய படங்களில் இயக்குனர் டீகே இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது.

அடுத்ததாக கேஜிஎஃப் திரைப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் சலார் படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கும் ஸ்ருதிஹாசன், தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் #NBK107 மற்றும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கும் #MEGA154 ஆகிய படங்களிலும் கதாநாயகியாக நடிக்கிறார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் சில தினங்களுக்கு முன்பு  உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டு தனக்கு PCOS இருப்பதாகவும் தொடரந்து அதோடு போராடி வருவதாகவும், எனவே அதற்காக நிறைய உடற்பயிற்சி செய்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு உடல்நிலையில் மிகப்பெரிய பிரச்சினை இருப்பதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் வதந்திகள் பரவின.

இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது நடிகை ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டேட்டஸில் வீடியோ பதிவிட்டுள்ளார். "தான் மிகவும் நலமாக இருப்பதாகவும், PCOS பிரச்சனை பொதுவாக பல பெண்களுக்கு இருக்கும் பிரச்சினை தான் என்றும் அது விரைவில் சரியாகி விடும் என்றும், தற்போது ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஸ்ருதிஹாசனின் அந்த வீடியோ இதோ…
 

Actress @shrutihaasan slashes out baseless rumours on her health issues and confirms that she is hale and healthy.

Check out her video statement.#ShrutiHaasan pic.twitter.com/1c6KQqAbQb

— 𝐕𝐚𝐦𝐬𝐢𝐒𝐡𝐞𝐤𝐚𝐫 (@UrsVamsiShekar) July 5, 2022