ரசிகர்கள் எதிர்பார்த்த ஜெயம் ரவி - நயன்தாராவின் இறைவன் பட ரிலீஸ் எப்போது..? சர்ப்ரைஸாக வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

ஜெயம் ரவி - நயன்தாராவின் இறைவன் பட ரிலீஸ் அறிவிப்பு,jayam ravi nayanthara in iraivan movie release date announcement | Galatta

தனி ஒருவன் படத்திற்கு பிறகு மீண்டும் நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் இறைவன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தனக்கென தனி ஸ்டைலில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் வகையில் தரமான திரைப்படங்களை தொடர்ச்சியாக தேர்ந்தெடுத்து நடித்துவரும் நடிகர் ஜெயம் ரவி கடைசியாக சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட்டான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கதையின் நாயகனாக மிக சிறப்பாக நடித்திருந்தார். தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான படங்கள் வரிசையாக காத்திருக்கின்றன. அந்த வகையில் திரைப்படமாக வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் தயாரிப்பில் பிரம்மாண்ட படைப்பாக 100 கோடி ரூபாய் செலவில் தனது 32 வது உருவாகும் JR32 படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருக்கிறார். இயக்குனர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இத்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க இருக்கிறார் என்பதும் கூடுதல் தகவலாக இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெகு விரைவில் வெளிவரும் என தெரிகிறது.

இதனிடையே சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் & ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் M.ராஜேஷ் இயக்கத்தில் தனது திரைப்பயணத்தின் 30வது திரைப்படமாக உருவாகும் JR30 படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்க நட்டி, விடிவி கணேஷ் ஆகியோர் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். முன்னதாக அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகும் சைரன் திரைப்படத்தில் ஜெயம் ரவி தற்போது நடித்து வருகிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த சைரன் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த வரிசையில் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்த ரிலீஸுக்கு தயாராகி வரும் திரைப்படம் தான் இறைவன். வாமனன், என்றென்றும் புன்னகை மற்றும் மனிதன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் I.அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாகவும் நயன்தாரா கதாநாயகியாகவும் நடித்துள்ள இறைவன் திரைப்படத்திற்கு ஹரி.K.வேதாந்த் ஒளிப்பதிவில், மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் G.ஜெயராம் தயாரிக்கும் இறைவன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இறைவன் திரைப்படத்தின் அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெயம் ரவியின் இறைவன் திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

#Iraivan will surprise you with the incredible theatrical experience across 4 languages from August 25th !!!#IraivanFromAug25#Nayanthara @Ahmed_filmmaker @thisisysr @PassionStudios_ #HariKVedanth @eforeditor @jacki_art @Synccinema @MangoPostIndia @gopiprasannaa @Shiyamjackpic.twitter.com/8wemronajr

— Jayam Ravi (@actor_jayamravi) June 7, 2023

சினிமா

"இந்தியாவின் முதல் தலைசிறந்த ALL TIME PAN INDIA STAR கமல் சார் தான்!"- வைரலாகும் சித்தார்த்தின் அட்டகாசமான வீடியோ இதோ!

உங்களை இயக்கும் நாள் வரும் என நினைத்ததே இல்லை!- சூப்பர் ஸ்டார் பற்றி எமோஷனலான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... லால் சலாம் பட புது GLIMPSE இதோ!
சினிமா

உங்களை இயக்கும் நாள் வரும் என நினைத்ததே இல்லை!- சூப்பர் ஸ்டார் பற்றி எமோஷனலான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... லால் சலாம் பட புது GLIMPSE இதோ!

'இது ஒரு நிறக்குருடு!' வில்லன்களுக்கு CLASS எடுக்கும் யோகி பாபு... சித்தார்த்தின் டக்கர் பட கலகலப்பான SNEAK PEEK வீடியோ இதோ!
சினிமா

'இது ஒரு நிறக்குருடு!' வில்லன்களுக்கு CLASS எடுக்கும் யோகி பாபு... சித்தார்த்தின் டக்கர் பட கலகலப்பான SNEAK PEEK வீடியோ இதோ!