"தனுஷ் இப்போ பெரிய ஸ்டார்!"- 'காதல் கொண்டேன் ஆதி' சுதீப் சாரங்கியின் ஸ்பெஷல் பேட்டி இதோ!

காதல் கொண்டேன் ஆதி சுதீப் சாரங்கியின் ஸ்பெஷல் பேட்டி,Dhanush selvaragavan Kaadhal kondein actor sudeep special interview in galatta | Galatta

இயக்குனர் செல்வராகவன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான காதல் கொண்டேன் திரைப்படத்தில் ஆதி எனும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சுதீப் சாரங்கி நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு சிறப்பு பேட்டி கொடுத்து இருக்கிறார். தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் செல்வராகவன் தனது இரண்டாவது படமாக இயக்கிய திரைப்படம் தான் காதல் கொண்டேன். கடந்த 2003ஆம் ஆண்டு வெளிவந்த காதல் கொண்டேன் திரைப்படம் அந்த சமயத்தில் விமர்சன ரீதியாக பலனது பாராட்டுகளை பெற்றதோடு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூல் ரீதியிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 

ஆர் கே ப்ரொடக்சன் தயாரிப்பில் உருவான காதல் கொண்டேன் படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில் VT.விஜயன் படத்தொகுப்பு செய்ய யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். நா முத்துக்குமார் மற்றும் பழனி பாரதியின் வரிகளில் யுவன் இசையில் வெளிவந்த காதல் கொண்டேன் திரைப்படத்தின் ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களின் இதயத்துடிப்பாக இன்று வரை துடிக்கின்றன. கதையின் நாயகனாக தனுஷ் நடிக்க, சோனியா அகர்வால் கதாநாயகியாக நடித்த காதல் கொண்டேன் திரைப்படத்தில் நாகேஷ், டேனியல் பாலாஜி, ஸ்ரீகாந்த், ஹேமலதா, ராம்போ ராஜ்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க நடிகர் சுதீப் சாரங்கி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

காதல் கொண்டேன் படத்தை தொடர்ந்து என்னவோ புடிச்சிருக்கு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் சுதீப், காதலே ஜெயம் திரைப்படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் பெங்காலி மற்றும் ஹிந்தி மொழி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த சுதீப் சாரங்கி தொடர்ந்து ஹிந்தியில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. டாக்ஸி டிரைவர் உடையில் சுதீப் இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் பரவி, அது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அவர் ஒரு விளம்பர படத்திற்கான படப்பிடிப்பில் டாக்ஸி டிரைவர் உடையில் இருந்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது தான் உண்மை.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி அளித்த நடிகர் சுதீப் சாரங்கி காதல் கொண்டேன் திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்கள் குறித்து பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், “இப்போதும் இயக்குனர் செல்வராகவன் மற்றும் தனுஷ் ஆகியோரோடு தொடர்பில் இருக்கிறீர்களா?” என கேட்டபோது, “அவ்வளவு தொடர்பில் இல்லை. இப்போது நடிகர் தனுஷ் பெரிய ஸ்டார்.. அதே போல் தான் இயக்குனர் செல்வா சாரும். ஆனால் செல்வா சார் உடன் பல ஆண்டுகள் தொடர்பில் இருந்தேன் எப்போதெல்லாம் சென்னைக்கு வருகிறேனோ அப்போதெல்லாம் செல்வா சாருக்கு போன் செய்வேன். ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் நாங்கள் அதிகம் சந்திக்கவில்லை.” என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகர் சுதீப் சாரங்கியின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

சினிமா

"எக்கச்சக்க ஆக்ஷன்... ரெடி ஸ்டெடி போ..!"- அட்லீயின் ஜவான் பட பக்கா மாஸ் அப்டேட் கொடுத்த ஷாரூக் கான்! விவரம் உள்ளே

சிவகார்த்திகேயன் - அதிதி ஷங்கர் இருவருக்கும் பல்ப் கொடுத்த படக்குழு... மாவீரன் 2வது பாடலை அறிவிக்கும் செம்ம ரகளையான வீடியோ இதோ!
சினிமா

சிவகார்த்திகேயன் - அதிதி ஷங்கர் இருவருக்கும் பல்ப் கொடுத்த படக்குழு... மாவீரன் 2வது பாடலை அறிவிக்கும் செம்ம ரகளையான வீடியோ இதோ!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 51வது படம்... மலேசியாவில் நடைபெறும் படப்பிடிப்பு குறித்த ஸ்பெஷல் அப்டேட் இதோ!
சினிமா

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 51வது படம்... மலேசியாவில் நடைபெறும் படப்பிடிப்பு குறித்த ஸ்பெஷல் அப்டேட் இதோ!