வானம் கொட்டட்டும் படத்திற்கு பிறகு தளபதி விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார் ஷாந்தனு. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தை XB பிலிம்ஸ் தயாரித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை துவங்கினர் படக்குழுவினர். விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. 

மாஸ்டர் ஆடியோ லான்ச்சில் தளபதி விஜய்யுடன் ஷாந்தனு ஆடிய நடனத்தை யாரும் மறக்க முடியாது. நடனத்தால் அரங்கையே அதிர வைத்தனர். கொரோனா ஊரடங்கில் புதிதாக youtube சேனல் துவங்கிய ஷாந்தனு, மனைவி கிகியுடன் சேர்ந்து என்டர்டெயின் செய்து வந்தார். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும் ஷாந்தனு, உடற்பயிற்சி, வீட்டு வேலைகள், நடனம், பாடல் என பல வீடியோக்களை பதிவு செய்து வந்தார். 

இந்த லாக்டவுனில் தன்னை ஓர் இயக்குனராகவும் செதுக்கிக் கொண்டார். கொஞ்சம் Corona Naraiyya காதல் எனும் குறும்படத்தை இயக்கினார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இந்த குறும்படம். அதன் பின் கெளதம் மேனன் இயக்கத்தில் ஒரு சான்ஸ் குடு பெண்ணே பாடலில் நடித்து பட்டையை கிளப்பினார். 

தற்போது ஷாந்தனு நடிக்கவிருக்கும் இராவண கோட்டம் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், செம்ம... இதுக்கு அப்பறோம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும் என நடிகர் ஷாந்தனு வாழ்த்தினர். படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் லோகேஷ். விக்ரம் சுகுமாரன் இயக்கும் இந்த கண்ணன் ரவி தயாரிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். 

இது தவிர்த்து ஷாந்தனு நடிப்பில் உருவாகி வரும் படம் முருங்கைகாய் சிப்ஸ். இத்திரைப்படத்தின் முதல் லுக் போஸ்டர் சில நாட்கள் முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஸ்ரீஜர் இந்த படத்தை இயக்குகிறார். பாக்யராஜ் முக்கிய ரோலில் நடிக்கிறார். ஷாந்தனு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார். தரண் இசையமைக்கும் இந்த படத்திற்கு மேஷ் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக ரவீந்தர் சந்திரசேகர் மற்றும் ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சார்பாக சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். யோகிபாபு, மனோபாலா, பிக்பாஸ் ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் இதில் நடிக்கவுள்ளனர்.