ஷாரூக் கான் - நயன்தாரா காம்போவில் ஜவான் பட ரொமான்டிக் பாடல்.. அனிருத்தின் அடுத்த சர்ப்ரைஸ்... அசத்தலான ப்ரோமோ இதோ!

ஷாரூக் கான் - நயன்தாராவின் ஜவான் பட ஐயோடா பாடல் ப்ரோமோ வெளியீடு,shah rukh khan in jawan movie hayyoda song promo out now | Galatta

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் - நயன்தாரா இணைந்து நடித்துள்ள ஜவான் படத்தில் இருந்து அடுத்த பாடலுக்காக வரும் ஐயோடா பாடலின் ப்ரோமோ வெளியானது. பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் ஷாரூக் கான் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த பதான் திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்த பதான் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ஷாரூக் கான் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. அந்த வகையில் ஷாருக் கான் நடிப்பில் அடுத்த அதிரடி படமாக தயாராகி வரும் திரைப்படம் தான் ஜவான். 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் அட்லீ முதல் முறை பாலிவுட்டில் இயக்குனராக களமிறங்கும் ஜவான் திரைப்படத்தில் ஷாரூக் கான் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக நயன்தாரா களமிறங்க, மிரட்டலான வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் பிரியாமணி, சானியா மல்ஹோத்ரா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ஜவான் படத்தில் தளபதி விஜய் கௌரவ வேடத்தில் நடித்திருப்பதாக தெரிகிறது. ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் ஜவான் திரைப்படத்திற்கு GK.விஷ்ணு ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். 

ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என PAN INDIA படமாக ஜவான் படம் ரிலீஸாகவுள்ளது. ஜவான் படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ஜவான் திரைப்படத்தின் ட்ரெய்லராக கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான ஜவான் திரைப்படத்தின் அதிரடியான PREVUE வீடியோ மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அட்லீயின் வழக்கமான மாஸ் விஷயங்கள் எல்லாம் சேர்ந்த பக்கா ஆக்சன் பேக்கேஜாக ஜவான் திரைப்படம் இருக்கும் என்பது இந்த PREVUE வீடியோவில் தெரிவதாக ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

முன்னதாக ஜவான் திரைப்படத்தின் முதல் பாடலாக வந்த "வந்த எடம்" என வந்திருக்கும் இந்த பாடல் தற்போது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. "வந்த எடம்" பாடலுக்கு ஆயிரம் பெண் டான்ஸர்களுடன் இணைந்து ஷாருக் கான் நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ஜவான் திரைப்படத்தின் அடுத்த பாடலாக ஐயோடா எனும் பாடல் வெளிவர இருக்கிறது. அனிருத்தினின் துள்ளலான இசையில் ஷாரூக் கான் - நயன்தாராவின் ரொமான்டிக் பாடலாக தயாராகியிருக்கும் இந்த ஐயோடா பாடல் நாளை ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஐயோடா பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அட்டகாசமான அந்த ப்ரோமோ வீடியோ இதோ…
 

Love will find a way to your heart….Chaleya Teri Aur….#Chaleya, #Hayyoda and #Chalona Song Out Tomorrow! #Jawan releasing worldwide on 7th September 2023, in Hindi, Tamil & Telugu. pic.twitter.com/ntAgvgsKLx

— Shah Rukh Khan (@iamsrk) August 13, 2023