“லோகேஷ் கனகராஜ் உடன் போட்டியா..?” விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த இயக்குனர் நெல்சன் – Exclusive Interview உள்ளே

லோகேஷ் கனகராஜ் உடன் போட்டி என்ற விமர்சனத்திற்கு பதிலளித்த நெல்சன் - Director Nelson about his competition with Director Lokesh kanagaraj | Galatta

தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் இயக்குனர்களில் முக்கியமானவர்கள் இயக்குனர் நெல்சன் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இருவரும் எதிர்பாராத அளவு ஹிட் கொடுத்து திரையுலகில் ஒரே நேரத்தில் அறிமுகமானவர்கள். ஒருபுறம் நயன்தாரா, சிவகார்த்திகேயன் தொடங்கி இயக்குனர் நெல்சன் திரைதுறையின் உச்ச நடிகர்களான தளபதி விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் படங்களை இயக்கியுள்ளார். அதே நேரத்தில் மறுபுறம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சந்தீப் கிஷன், கார்த்தி தொடங்கி தளபதி விஜய், உலகநாயகன் கமல் ஹாசனுடன் ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்த இரண்டு இயக்குனர்களின் ரசிகர்களும் இணையத்தில் இருவருக்கு திரைப்பட ரீதியாக போட்டி நிலவுவதாக பேசி வந்தனர். சமீப காலமாக இது தொடர்பாக அதிகம் செய்தி பரவிய நிலையில் இந்த சம்பவம் குறித்து நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் அவர் பேசியதாவது,  “நம்ம பன்ற கதைகளம் வேற மாதிரி இருக்கும். ஒவ்வொருத்தருக்கு ஒரு தனித்தன்மை இருக்கும்‌. இப்போ லோகேஷ் க்கு தனி சிறப்பு இருக்கும். அவருக்கு அவர் படங்களை விட சிறந்த படம் பண்ணனும் ன்றது தான் சவாலா இருக்கும். அதைதவிர அவர் என்ன பார்த்தோ இல்ல நான் அவரை பார்த்தோ பண்ண போறது இல்ல..  இப்போ கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் பண்ணேன். என்னோட முந்தைய படங்களை ஒப்பிட்டு தான் இப்போ படங்கள் பண்ணிட்டு வரேன்.. அதே மாதிரி தான் லோகேஷ் ம்..

ஒவ்வொரு மார்கெட்டும் ஒவ்வொரு பிஸினஸையும் உயிர்ப்போட வெச்சிருக்கிறதே போட்டிதான். அதை யாரும் தவறான நோக்கத்துடன் பார்க்க மாட்டாங்க.. சில நேரம் ரசிகர்கள் பொழுதுபோக்கிற்காக பேசுவாங்க.. அதை நம்ம பார்த்துட்டு விட்றனும்.. எங்க இரண்டு பேர் படம் ஒரே நாள் ல வந்தாலும் இரண்டு படமும் ஹிட் ஆக வாய்ப்பு உள்ளது.. இவர் மட்டுதான் வெற்றி பெறுவாருனு இல்ல.. 10 பேருனா 10 பேரும் ஜெயிக்கிற வாய்ப்பு சினிமா துறையில இருக்கு.” என்றார் இயக்குனர் நெல்சன்.

ஜெயிலர் திரைப்படத்தின் பிளாக் பஸ்டர் ஹிட்டிற்கு பிறகு இயக்குனர் நெல்சன் அடுத்ததாக தனுஷ் உடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. தளபதி விஜய் கூட்டணியில் உருவாகி வரும் லியோ திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல். இதுகுறித்தும் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இயக்குனர் நெல்சன் அவர்கள் ஜெயிலர் திரைப்படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட முழு வீடியோ உள்ளே..