போர்த் தொழில் வரிசையில் சுப்ரீம் சரத்குமாரின் அடுத்த அதிரடி போலீஸ் அவதாரம்... பரம்பொருள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

அமிதாஷ் - சரத்குமாரின் பரம்பொருள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு,sarathkumar amithash in paramporul movie release date announcement | Galatta

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மற்றும் அமிதாஷ் இணைந்து நடித்திருக்கும் பரம்பொருள் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. தென்னிந்திய சினிமாவில் இன்றைய அமையாத நடிகர்களில் ஒருவராக ஹீரோ - வில்லன் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடித்து வரும் நடிகர் சரத்குமார் இந்த  2023ம் ஆண்டில் தொடக்கத்தில் தளபதி விஜயுடன் இணைந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான வாரிசு, ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து வில்லனாக நடித்த ருத்ரன், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தெலுங்கு & தமிழ் என இரு மொழிகளில் நாக சைதன்யா நடித்த கஸ்டடி, இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படைப்பாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையராக மிகச் சிறப்பாக நடித்த, சரத்குமார் கடைசியாக சமீபத்தில் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில் வெளிவந்த போர்த் தொழில் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.

பக்கா க்ரைம் த்ரில்லர் படமாக வெளிவந்த போர்த் தொழில் திரைப்படம் இந்த 2023ம் ஆண்டின் மிக முக்கிய படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டதை தொடர்ந்து சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்களின் நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக அட்டகாசமான திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. அந்த வகையில் இயக்குனர் நடிகர் M.சசிகுமார் உடன் இணைந்து நா நா, நடிகர் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து கிரிமினல், துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வாவுடன் இணைந்து நிறங்கள் மூன்று உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் சரத்குமார் தனது 150வது திரைப்படமாக உருவாகும் தி ஸ்மைல் மேன் திரைப்படத்திலும் , தொடர்ந்து ஆழி என்ற புதிய படத்திலும் நடித்து வருகிறார். இந்த வரிசையில் சரத்குமார் நடிப்பில் அடுத்த முக்கிய படமாக வரவிருக்கும் படம் தான் பரம்பொருள். வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் நடித்த நடிகர் அமிதாஷ் உடன் இணைந்து சரத்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் பரம்பொருள் படத்தில் காஷ்மிரா பரதேசி கதாநாயகியாக நடித்திருக்கிறார். 

மனோஜ் மற்றும் கிரிஷ் இணைந்து தயாரித்திருக்க சிலை கடத்தலை மையப்படுத்திய கிரைம் திரில்லர் திரைப்படமாக உருவாக்கி இருக்கும் இந்தப் பரம்பொருள் திரைப்படத்தை இயக்குனர் C.அரவிந்த்ராஜ் எழுதி இயக்கியுள்ளார். சமீபத்தில் போர் தொழில் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக ரசிகர்களை கவர்ந்த சரத்குமார் இந்த பரம்பொருள் திரைப்படத்திலும் மிரட்டரான காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பது இன்னும் எதிர்பார்ப்புகளை கூட்டி இருக்கிறது. S.பாண்டி குமார் ஒளிப்பதிவில், நாகூரான் படத்தொகுப்பு செய்திருக்கும் பரம்பொருள் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். பரம்பொருள் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. தொடர்ந்து பரம்பொருள் திரைப்படத்தின் ப்ரோமோ பாடலாக அடியாத்தி என்ற பாடலை யுவன் சங்கர் ராஜா இசையில் அனிருத் பாட சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த அந்த பாடலும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த பரம்பொருள் திரைப்படம் வருகிற செப்டம்பர் 1ம் தேதி வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு இதோ……
 

#ParamporulMovie starring @realsarathkumar @amitashpradhan is coming to theatres on Sept 1st🔥

A @thisisysr musical🎶@kashmira_9 @aravind275 @dop_harish @S_Pandikumar #Nagooranramchandran @kavi_creations @SakthiFilmFctry @onlynikil @gobeatroute pic.twitter.com/tKBO12RAO3

— U1 Records (@U1Records) August 12, 2023