ஹிப்ஹாப் ஆதியின் ‘வீரன்’ வெற்றியையடுத்து ‘மரகத நாணயம் 2’-வை கையில் எடுத்த இயக்குனர்..! – ரசிகர்களால் வைரலாகும் அட்டகாசமான அப்டேட்..

மரகதநாணயம் 2 குறித்து இயக்குனர் ஏஆர்கே சரவணன் கொடுத்த அப்டேட் - Veeran director ARK Saravan Confirms Maragatha naanayam 2 | Galatta

தமிழில் சூப்பர் ஹீரோ கதைகளத்தில் உருவாகி கடந்த ஜூன் 2ம் தேதி வெளியான திரைப்படம் ‘வீரன்’. ரசிகர்களினால் கொண்டாடப்பட்ட மரகதநாணயம் பட இயக்குனர் ஏ ஆர் கே சரவன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி வீரன் கதாபாத்திரத்தில் சூப்பர் ஹீரோவாக நடிக்க இவருடன் இணைந்து ஆதிரா ராஜ், வினய், முனீஸ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்க்ளில் நடித்துள்ளனர். சக்தி ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் செந்தில் தியாகராஜன், அருண் தியாகராஜன் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தீபக் டி மேனன் ஒளிப்பதிவு செய்ய படத்திற்கு இசையமைத்துள்ளார் ஹிப் ஹாப் ஆதி. இவரது இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

கிராமத்தில் சட்டவிரோதமான சோதனைக்காக ஆராய்ச்சி செய்யும் நிறுவனத்தை சூப்பர் ஹீரோ சக்தியுடன் ஹிப்ஹாப் ஆதி தடுக்கும் கதைக்களமாக கொண்டு உருவான வீரன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக குடும்பன்களுடன் ரசிகர்கள் வீரன் படத்தை கண்டு ரசித்தனர். மேலும் விமர்சன ரீதியாவும் வசூல் ரீதியாகவும் வீரன் திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடதக்கது

இந்நிலையில் வீரன் பட இயக்குனர் ஏ ஆர் கே சரவன் தற்போது அவருடைய மூன்றாவது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவரது அறிவிப்பின்படி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து  வெற்றி பெற்ற மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் உற்சாகத்துடன் அப்பதிவினை வைரலாக்கி வருகின்றனர்.

கடந்த 2017ல் இயக்குனர் ஏ ஆர் கே சரவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மரகத நாணயம்’. ஆதி ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ஆனந்த் ராஜ், முனீஸ்காந்த், காளி வெங்கட், அருண்ராஜா காமராஜ், மைம் கோபி, எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Axes film industry தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பிவி ஷங்கர் ஒளிப்பதிவு செய்ய பிரசன்னா ஜிகே படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியான நீ கவிதைகளா பாடல் இன்றும் இணையத்தில் டிரென்ட் என்பது குறிப்பிடதக்கது.

பேண்டசி கதைகளத்தில் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மரகத நாணயம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகுமா இல்லை தனி பாகமாக உருவாகுமா என்று ரசிகர்கள் தங்கள் ஆர்வத்தை பகிர்ந்து இயக்குனரின் பதிவை வைரலாக்கி வருகின்றனர்.

'2'... Loading... with Bangggg ⚡️@AxessFilm @Dili_AFF pic.twitter.com/KcSccfurKz

— Ark Saravan (@ArkSaravan_Dir) July 26, 2023

 

“என்னையும் என் குடும்பத்தாரையும் மிரட்டாதீர்கள்..” சர்ச்சைக்குள்ளான படத்தை கைவிட்ட தயாரிப்பாளர்.. இணையத்தில் வைரலாகும் பதிவு உள்ளே..
சினிமா

“என்னையும் என் குடும்பத்தாரையும் மிரட்டாதீர்கள்..” சர்ச்சைக்குள்ளான படத்தை கைவிட்ட தயாரிப்பாளர்.. இணையத்தில் வைரலாகும் பதிவு உள்ளே..

“தமிழ் திரையுலகம் இதை பரிசீலனை செய்ய வேண்டும்..” பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண்.. – விவரம் உள்ளே..
சினிமா

“தமிழ் திரையுலகம் இதை பரிசீலனை செய்ய வேண்டும்..” பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண்.. – விவரம் உள்ளே..

“10 வருஷம் கழிச்சு பேச வேண்டியதை முன்னாடியே சொல்லிட்டேன்” ஈசன் படம் குறித்து இயக்குனர் சசிகுமார்.. – Exclusive interview இதோ..
சினிமா

“10 வருஷம் கழிச்சு பேச வேண்டியதை முன்னாடியே சொல்லிட்டேன்” ஈசன் படம் குறித்து இயக்குனர் சசிகுமார்.. – Exclusive interview இதோ..