“உங்களுக்கு பிடிச்ச வேலைய பிடிச்ச விதத்தில் பண்ணுங்க..” விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த துல்கர் சல்மான்.!

ரசிகரின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த துல்கர் சல்மான் பதிவு உள்ளே - Dulquer Salmaan responds to fans' criticism of Heeriye music video | Galatta

தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் துல்கர் சல்மான். மலையாள திரையுலகில் அறிமுகமானாலும் அறிமுகமான நாட்களில் இருந்தே தென்னிந்திய ரசிகர்களின் ஆதரவை பெற்று வந்தார். அதன்பின் தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் ‘ஒ காதல் கண்மணி’ படத்தில் நடித்து மிகப்பெரிய அளவு புகழ் பெற்றார். தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்து இளம் நடிகர்களில் முக்கியமானவராய் வலம் வந்தார். அதன்பின் துல்கர் சல்மான் தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியிலும் பல படங்களில் நடித்து தென்னிந்தியா மட்டுமல்லாமல் இந்திய திரையுலகில் வெற்றி நாயகனாய் வலம் வருகிறார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு தமிழில் ‘ஹே சினாமிகா’, மலையாளத்தில் ‘சல்யூட்’, இந்தியில் ‘சுப்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது. இதில் குறிப்பாக தெலுங்கு மொழியில் உருவாகி பான் இந்திய அளவில் வெளியான ‘சீதா ராமம்’ திரைப்படம் இந்திய அளவு வெற்றியை துல்கர் சல்மானுக்கு கொடுத்தது.

தற்போது துல்கர் சல்மான் மலையாளத்தில் உருவாகும் ‘கிங் ஆப் கோதா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். மிரட்டலான கேங்க்ஸ்டர் கதைகளத்தில் உருவான இப்படத்தின் டீசர் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெற்றது. வரும் ஆகஸ்ட் மாதம்  பான் இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் துல்கர் சல்மான் இசையமைப்பாளர் ஜாஸ்லீன் ராயல் இசையில் அர்ஜித் சிங் பாடிய பாடலின் வீடியோ ஒன்றில் நடித்துள்ளார். நேற்று இப்பாடலின் வீடியோ வெளியாகி இணையத்தில் டிரென்ட்டிங்கில் இருந்து வருகிறது, மேலும் இப்பாடல் ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Bro yen bro video song ellam panringa?! Padathula innum adhigama nadinga bro! Malayalam, Tamil, Telugu, Kannada nu innum neraiya South padangal pannunga thalaivarey!🙏

— DJ ALI (@Hisrath95) July 26, 2023

இந்நிலையில் ஹீராயா மியூசிக் வீடியோவில் நடித்தது குறித்து ரசிகர் ஒருவர் துல்கர் சல்மானிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் பதிவில்., “ஏன் வீடியோ பாடல்களாம் பண்றீங்க.. படத்துல இன்னும் அதிகமா நடிங்க..மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடா னு இன்னும் நிறைய தென்னிந்திய படங்கள் பண்ணுங்க தலைவரே..” என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு துல்கர் சல்மான் பதிலளித்துள்ளார்.

Respect all mediums and all formats of art. End of the day I’ll be a part of anything original. Irrespective. Neengalum ungalukku pudicha velaiya ungalukku pudicha vidhathila pannunge. Experience thaane vaazhkai. Athile perisu chinnathu-nu onnum illai. I’ll cherish the experience…

— Dulquer Salmaan (@dulQuer) July 26, 2023

 

அவர் பகிர்ந்த பதிவில், “அனைத்து வடிவ கலைகளையும் மதிக்க வேண்டும்.. நான் எல்லா விதமான கலைகளிலும் இருக்க விரும்புகிறேன்..அதை பொருட்படத்தாமல்  நீங்களும் உங்களுக்கு பிடிச்ச வேலைய உங்களுக்கு பிடிச்ச விதத்தில் பண்ணுங்க.. அனுபவம் தானே வாழ்கை. அதில் பெருசு சின்னதுன்னு ஒன்னும் இல்லை.. இந்த மியூசிக் வீடியோவில் நடித்த அனுபவத்தையும் இதில் பணியாற்றியவர்களையும் என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். நான் இதன் மூலம் செழிப்படைந்துள்ளேன். ஒரு வாழ்கை தான் வாழ போகிறோம்.. மனிதர்களையும் அனுபவத்தையும் தான் கொண்டு செல்ல போகிறோம்.. ஆல் தி பெஸ்ட் சகோதரா..” என்று குறிப்பிட்டு ரசிகருக்கு அட்வைஸ் செய்துள்ளார். இதையடுத்து துல்கர் சல்மான் பதிவு பாராட்டுகளுடன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் திரையுலகம் இதை பரிசீலனை செய்ய வேண்டும்..” பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண்.. – விவரம் உள்ளே..
சினிமா

“தமிழ் திரையுலகம் இதை பரிசீலனை செய்ய வேண்டும்..” பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண்.. – விவரம் உள்ளே..

“10 வருஷம் கழிச்சு பேச வேண்டியதை முன்னாடியே சொல்லிட்டேன்” ஈசன் படம் குறித்து இயக்குனர் சசிகுமார்.. – Exclusive interview இதோ..
சினிமா

“10 வருஷம் கழிச்சு பேச வேண்டியதை முன்னாடியே சொல்லிட்டேன்” ஈசன் படம் குறித்து இயக்குனர் சசிகுமார்.. – Exclusive interview இதோ..

ஆஸ்கர் விருது வென்ற கலைஞருடன் உலகநாயகன் கமல் ஹாசன்.. – இறுதிகட்டத்தை நெருங்கும் ஷங்கரின் இந்தியன் 2.. -  வைரல் பதிவு உள்ளே..
சினிமா

ஆஸ்கர் விருது வென்ற கலைஞருடன் உலகநாயகன் கமல் ஹாசன்.. – இறுதிகட்டத்தை நெருங்கும் ஷங்கரின் இந்தியன் 2.. - வைரல் பதிவு உள்ளே..