மாடல் ஆக தனது மீடியா வாழ்க்கையை ஆரம்பித்து சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாகவும்,நடிகையாகவும் அசத்தி வருபவர் பவித்ரா VJ.மாடல் ஆக ஆரம்பித்த இவர் மிஸ் சௌத் இந்தியா 2017 பட்டத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இவர் ஒரு படத்தில் நடித்திருந்தார் அந்த படம் சில காரணங்களால் வெளியாகவில்லை.இதனை அடுத்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்  பவித்ரா.சொப்பன சுந்தரி,சூர்யவணக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார்.

அடுத்தாக சன் டிவியில் ஒளிபரப்பான நிலா என்ற தொடரில்  நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் பவித்ரா.இந்த தொடரில் நடித்ததன் மூலம் இவருக்கென தனியொரு ரசிகர் பட்டாளமே உருவானது.சில வருட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் 2 தொடரில் ஒரு ஹீரோயினாக நடித்து அசத்தினார்.

தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார் பவித்ரா.இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.தற்போது தனது ட்ரான்ஸ்பர்மேஷன் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.இந்த ட்ரான்ஸ்பர்மேஷன் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்