பிரபல தொலைக்காட்சி ஜோடிகளில் ஒருவரான சமீரா ஷெரிஃப் மற்றும் சையத் அன்வர் விரைவில் பெற்றோராக உள்ளனர். சமீராவும், ஷையதும் தங்கள் இன்ஸ்டாகிராமில் நாங்கள் இனி கணவன் மனைவி இல்லை என்ற தலைப்பில் ஒரு வீடியோவுடன் இதை அறிவித்துள்ளனர். இதை அறிந்த ரசிகர்கள் இந்த அழகான ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

சமீரா ஷெரிஃப் மற்றும் சையத் அன்வர் ரசிகர்கள் இந்த ஜோடிக்காக மகிழ்ச்சியடைந்துள்ளனர். சமீரா ஷெரிஃப் மற்றும் அவரது கணவர் சையத் அன்வர் ஆகியோர் சக்தி மற்றும் பிரபாகரன் என்ற வேடங்களில் பகல் நிலவு என்ற விஜய் டிவி சீரியலில் சேர்ந்து நடித்துள்ளனர். 

பின்பு  தங்கள் உறவை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல விருப்பிய அவர்கள் நவம்பர், 2019 இல் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2006-ம் ஆண்டு தெலுங்கில் ஆடப்பில்லா என்ற சீரியலில் நடித்தாலும், தமிழில் சமீரா ஷெரிஃப் ரெக்கை கட்டி பரக்குது மனசு என்ற சீரியலில் நடித்தார். 

அதேபோல் அன்வர் சரவணன் மீனாக்ஷி, பிரிவோம் சந்திப்போம், தாயுமானவன் மற்றும் ரெக்கை கட்டி பரக்குது மனசு போன்ற சீரியல்களில் தோன்றியதற்காக அறியப்படுகிறார். அதேபோல் அன்வர் பல பிரபல சீரியல்களை தயாரித்த தயாரிப்பாளரும் கூட. 

இந்நிலையில் ரசிகர்கள் இந்த தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கர்ப காலத்தில் உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்கள் என்று ரசிகர்களும் அவருக்கு டிப்ஸ் தந்து வருகின்றனர். குட்டி சமீராவா அல்லது குட்டி சையத்தா என்று விரைவில் சொல்லுங்கள் என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் சீரியல் விரும்பிகள். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sameera Sherief (@sameerasherief)