சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் சீரியல் நடிகையாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனன்யா மணி.கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று வந்தாள் ஸ்ரீதேவி.2018 முதல் 2019 வரை ஒளிபரப்பான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த தொடரின் ஹீரோயினாக அனன்யா மணி நடித்திருந்தார்.இந்த தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறினார் அனன்யா மணி.இந்த சீரியலை அடுத்து இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

அடுத்தாக மியூசிக் வீடியோ,ஆல்பம் பாடல்,திரைப்படம் என்று நடித்து வருகிறார் அனன்யா மணி.நட்டி நடிப்பில் உருவாகி வரும் வெப் என்ற படத்தில் ஒரு ஹீரோயினாக நடித்து வருகிறார் அனன்யா மணி.இவருக்கு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்று முடிந்தது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் அனன்யா அவ்வப்போது தனது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார் தற்போது இவர் ஹீரோயினாக நடித்துள்ள வல்லவன் வகுத்ததடா என்ற படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டுள்ளது.இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.