தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனராக திகழும் இயக்குனர் செல்வராகவன் சாணிக் காயிதம் திரைப்படத்தின் மூலம் நடிகர் அவதாரம் எடுத்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள சாணிக் காயிதம் படத்தை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். முதல்முறை செல்வராகவன் நடத்துள்ள சாணிக் காயிதம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ள நிலையில் விரைவில் ரிலீசாக தயாராகி வருகிறது.

முன்னதாக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம் ராக்கி. RA ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் மனோஜ்குமார் தயாரித்துள்ள ராக்கி படத்தில் வசந்த் ரவி மற்றும் இயக்குனர் பாரதிராஜா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க டப்பிங் கலைஞர் ரவீனா ரவி மற்றும் நடிகை ரோகிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ராக்கி திரைப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, தர்புகா சிவா இசையமைத்துள்ளார். நீண்ட நாட்களாக ரசிகர்கள்  காத்திருந்த ராக்கி படத்தை நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட கடந்த ஆண்டு(2021) டிசம்பர் 23-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டானது.

இந்நிலையில் ராக்கி திரைப்படம் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிந்தியில் பிரபல தயாரிப்பு நிறுவனமான WAKAOO FILMS நிறுவனம் ராக்கி படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த இதர அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.