பிரபல மாடல் ஆக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கி சின்னத்திரையில் புகழ்பெற்ற நடிகையாக கலக்கி வருபவர் ஷபானா.விளம்பர படங்களில் நடித்து கவனம் ஈர்த்த இவர் அடுத்ததாக விஜயதசமி என்ற மலையாள தொடரில் நடித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.

அடுத்ததாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரில் ஹீரோயினாக நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார் ஷபானா.பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் ஷபானா.இந்த சீரியல் வெகு விரைவில் முடிவடையுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இவர் தனது காதலரான சீரியல் நடிகர் ஆர்யன் என்னும் வேலு பிரபாகரனை கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார்.இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.இவர் எப்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரப்போகிறார் என்று ரசிகர்கள் காத்திருந்தனர்.

தற்போது தனது வெள்ளித்திரை என்ட்ரி குறித்து ஷபானா பதிவிட்டுள்ளார்.விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கும் பகையே காத்திரு.இந்த படத்தில் இவருடன் ஸ்ம்ருதி வெங்கட்,வரலக்ஷ்மி சரத்குமார்.வித்யா பிரதீப் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றுள்ளது,இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதை ஷபானா சில புகைப்படங்களுடன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து உறுதி செய்துள்ளார்.சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு என்ட்ரி தரும் இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்