தமிழ் தொலைக்காட்சிகளில் தங்கள் வித்தியாசமான தொடர்கள் மூலமாகவும்,சீரியல்கள் மூலாகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது விஜய் டிவி.இவர்களின் சீரியல்களுக்கு எப்போதும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும்.ஒவ்வொரு சீரியலுக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர்ஹிட் அடித்து வரும் தொடர் பாவம் கணேசன்.மதிய வேளையில் ஒளிபரப்பானாலும் பல ரசிகர்களை பெற்றுள்ளது இந்த தொடர்.கலக்கப்போவது யாரு சீசன் 5-வில் அசத்திய நவீன் இந்த தொடரின் நாயகனாக நடித்து வருகிறார்.

கல்யாண பரிசு தொடரில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த நேஹா கௌடா ஹீரோயினாக நடித்து வருகிறார்.அனிலா ஸ்ரீகுமார்,ஷிமோனா ஜேம்ஸ்,யுவன்ராஜ் நேத்ரன்,சம்யுக்தா,தேவிப்ரியா என பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி இந்த தொடர் 400 எபிசோடுகளை கடந்து சென்று வருகிறது.இந்த தொடரில் தற்போது புது என்ட்ரியாக செம்பருத்தி தொடரில் உமா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய துர்கா இணைந்துள்ளார்.இவரது எபிசோடுகள் தற்போது ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.