தமிழ் திரை உலகின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் சீனு ராமசாமி தமிழ் சினிமாவிற்கு சிறந்த படைப்புகளை வழங்கி வருகிறார். முன்னதாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் திரைப்படம் நிறைவடைந்த நிலையில் தனது புதிய திரைப்படத்தில் ஜீவி பிரகாஷ் குமார் உடன் இணைந்தார் இயக்குனர் சீனு ராமசாமி.

தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் இசையமைப்பாளராக சிறந்த பாடல்களை கொடுத்து வரும் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் நடிகராகவும் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இடிமுழக்கம் திரைப்படத்தில் கதாநாயகனாக ஜீவி பிரகாஷ்குமார் நடிக்க நடிகை காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார்.

பிரபல தயாரிப்பாளர் கலைமகன் அவர்களின் ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இடிமுழக்கம் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் N.R.ரகுநந்தன் இசையமைக்க கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இடிமுழக்கம் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்நிலையில் இடிமுழக்கம் திரைப்படத்தின் முக்கிய தகவல் இன்று வெளியானது . இடிமுழக்கம் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து இடிமுழக்கம் திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.