சுயாதீன இசை கலைஞராக தமிழ் இசை ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி,இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்த ஆம்பள திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார்.

குறிப்பாக நடிகர் ஜெயம் ரவியின் தனி ஒருவன் & கோமாளி, மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் கவண், நயன்தாராவின் இமைக்கா நொடிகள், சிவகார்த்திகேயனின் Mr.லோக்கல் என பல திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக இசை அமைத்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அவதாரம் எடுத்தார். தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அடுத்ததாக ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி நடித்து இசையமைத்துள்ள சிவகுமாரின் சபதம் திரைப்படம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீசாகிறது. ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இண்டி ரெபெல்ஸ் மற்றும் சத்யஜோதி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள சிவகுமாரின் சபதம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை மாதுரி ஜெயின் நடித்துள்ளார். அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவில் தீபக்.எஸ்.த்வாரக்நாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

முன்னதாக வெளியான சிவகுமாரின் சபதம் பாடல்களும் டிரைலரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது சிவகுமாரின் சபதம் படத்திலிருந்து மற்றொரு புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் அந்த ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.