தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான ஆஃபீஸ் & ரெட்டைவால் குருவி உள்ளிட்ட மெகா தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகர் அஸ்வின் குமார். தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

நடிகராகவும் இயக்குனர் பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம், இயக்குனர் மணிரத்னத்தின் ஓகே கண்மணி, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்திருந்த அஸ்வின் குமார், தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இயக்குனர் A.ஹரிஹரன்  எழுதி இயக்கும் என்ன சொல்ல போகிறாய் திரைப்படத்தில் நடிகர் அஸ்வின் குமார் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை தேஜு அஸ்வினி மற்றும் அவந்திகா கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.ரொமான்டிக் காமெடி திரைப்படமான என்ன சொல்ல போகிறாய் படத்தில் விஜய் டிவி புகழ் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார்.

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் தயாரிப்பாளர் R.ரவீந்தரன் தயாரிப்பில் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவில் விவேக் மற்றும் மெர்வின் இசையமைத்துள்ள என்ன சொல்ல போகிறாய் படத்தின் இசை குறித்த முக்கிய தகவல் வெளியானது. என்ன சொல்ல போகிறாய் படத்தின் இசை மற்றும் பாடல்களின் உரிமைகளை பிரபல இசை நிறுவனமான மியூசிக் 247 நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானது. தொடர்ந்து என்ன சொல்ல போகிறாய் படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.