தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு & எஸ்.ஆர்.பிரபு அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தொடர்ந்து சிறந்த திரைப்படங்களை தயாரித்து வருகிறது. குறிப்பாக இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் ஜோக்கர், இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் தீரன் அதிகாரம் ஒன்று, இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் அருவி ஆகிய திரைப்படங்கள் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்தது.

மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து விருவிருப்பான கதைகளத்தோடு வெளிவந்த கைதி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் அடுத்த திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியானது.

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பிரபல தென்னிந்திய நடிகர் சர்வானந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக நடிகை ரிது வர்மா நடித்துள்ளார். இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு தமிழில் கணம் என பெயரிடப்பட்டுள்ளது தெலுங்கில் ஓகே ஒக ஜீவிதம் என வெளியாகிறது.

பிரபல ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் ஒளிப்பதிவில் ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்ய ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று இத்திரைப்படத்தின் தமிழ் டைட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து இத்திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.