தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆனது.

இதனையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகும் பீஸ்ட் திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்துள்ளார். கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் பீஸ்ட் படத்தில் மிரட்டலான வில்லனாக இயக்குனர் செல்வராகவன் நடித்துள்ளார்.

மேலும் யோகிபாபு, டாம் ஷைன் சாக்கோ, ஜான் விஜய், VTV கணேஷ், அபர்ணா தாஸ் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள பீஸ்ட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் விரைவில் முதல் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தளபதி விஜய்யின் UNSEEN புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ், தளபதி விஜய்யுடன் காரில் சென்றபோது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ட்ரெண்டாகி வரும் அந்த புகைப்படம் இதோ...