தமிழ் திரையுலகின் மிக சிறந்த நடிகராகவும் முன்னணி நட்சத்திர ஹீரோவாகவும் திகழ்கிறார் நடிகர் தனுஷ். அடுத்ததாக கலைப்புலி.எஸ்.தாணு அவர்களின் தயாரிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தயாராகி வரும் நானே வருவேன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்திலும் நடித்து வருகிறார் தனுஷ். மேலும் ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் பட இயக்குனர்களான ரூசோ சகோதரர்களின் இயக்கத்தில் தி க்ரே மேன் மற்றும் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் ஆகிய படங்களின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

முன்னதாக பாலிவுட்டில் இயக்குனர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், அக்ஷய் குமார் மற்றும் சாரா அலி கான் இணைந்து நடித்துள்ள அற்றங்கி ரே படம் தமிழில் கலாட்டா கல்யாணம் என வருகிற டிசம்பர் 24ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக ரிலீசாகவுள்ளது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள கலாட்டா கல்யாணம் திரைப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நாளை கலாட்டா கல்யாணம் படத்திலிருந்து லிட்டில் லிட்டில் பாடல் வீடியோ வெளிவர உள்ளது அதன் முன்னோட்டமாக தற்போது கலக்கலான ப்ரோமோ வீடியோ வெளியானது. அந்த ப்ரோமோ இதோ…