ஹீரோ ஆன பிறகு கற்றுக் கொண்ட ஒரு விஷயம்..!"- முதல் முறை மனம் திறந்த நடிகர் சந்தானத்தின் சிறப்பு பேட்டி இதோ!

ஹீரோ ஆன பிறகு கற்றுக்கொண்ட விஷயம் பற்றி பேசிய சந்தானம்,santhanam shared about his learning after starting as hero in cinema | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்கள் அனைவருடனும் இணைந்து நட்சத்திர காமெடியனாக கலக்கிய நடிகர் சந்தானம் தற்போது நகைச்சுவை மையப்படுத்திய திரைப்படங்களில் தொடர்ச்சியாக கதையின் நாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் நகைச்சுவை திரைப்படமாக சந்தானம் நடித்திருக்கும் கிக் திரைப்படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தில் சந்தானம் நடித்து வருகிறார். விரைவில் இப்படத்தின் இதர அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே சந்தானத்தின் அடுத்த நகைச்சுவை சரவெடியாக தற்போது  வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் DD ரிட்டர்ன்ஸ். ஆர்கே என்டர்டைன்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் C.ரமேஷ் குமார் தயாரிப்பில் ஹாரர் காமெடி திரைப்படமாக உருவாக்கி இருக்கும் இந்த DD ரிட்டன்ஸ் திரைப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடிகை சுரபி கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் ரெட்டின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவட், மசூம் ஷங்கர், பெப்சி விஜயன், மொட்டை ராஜேந்திரன், முனீஸ் காந்த், தீனா, விபின், தங்கதுரை, தீபா, சைதை சேது மற்றும் மானசி உள்ளிட்ட பல முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த DD ரிட்டன்ஸ் திரைப்படத்திற்கு தீபக் குமார் பதி ஒளிப்பதிவில், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்ய OFRO இசை அமைத்திருக்கிறார். கடந்த 28ஆம் தேதி DD ரிட்டன்ஸ் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற சந்தானம் ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் சந்தானம் கலந்து கொண்டார். மதுரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நம்முடைய பல சுவாரசியமான கேள்விகளுக்கு சந்தானம் பதில் அளித்தார். அப்படிப் பேசும் போது, “நீங்கள் 20க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக திரை துறையில் இருக்கிறீர்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருப்பீர்கள். ஆனால் கதாநாயகனாக ஆன பிறகு கற்றுக்கொண்ட ஒரு விஷயம் என்றால் எதை சொல்வீர்கள்?” என கேட்ட போது,

“பொறுமை தான்… எல்லாருக்குமே வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு பொறுமை தான் வேண்டும். எதற்குமே கொஞ்சம் அவசரப்பட்டால் கிடைக்காது. நமக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும், ஆனால் கொஞ்சம் பொறுமையாக இருந்து கையாள வேண்டும் அவசரப்பட்டு சில விஷயங்களை செய்தால் தப்பாகிவிடும். அதைத்தான் சொல்வேன் பந்தியில் பரிமாறும் போதும் கூட பொரியல், கூட்டு, ஸ்வீட் எல்லாம் வைத்துவிட்டு சாப்பாடு வைப்பதற்குள் அவற்றையெல்லாம் எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். அந்த மாதிரி எல்லாம் அவசரப்படக்கூடாது வாழ்க்கையில், சாப்பாடு வந்து சாம்பார் ஊற்றி அப்பளம் வைத்த பிறகு பொறுமையாக எடுத்து சாப்பிட்டால் தான் சரியாக இருக்கும். வாழ்க்கையில் எல்லாவற்றையும் பொறுமையாக தான் கையாள வேண்டும். எல்லாருக்குமே வாழ்க்கையில் சில நேரங்களில் சில விஷயங்கள் கிடைக்கும் அதற்கு பொறுமையாக இருக்க வேண்டும் அவ்வளவுதான். அவசரப்படாமல்..." என பதில் அளித்துள்ளார். இன்னும் பல சுவாரசியமான கேள்விகளுக்கு பதில் அளித்த நடிகர் சந்தானத்தின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

ஜெயிலர் இசை வெளியீட்டில் அனிருத்தை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... ட்ரெண்டிங் வீடியோ இதோ!
சினிமா

ஜெயிலர் இசை வெளியீட்டில் அனிருத்தை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... ட்ரெண்டிங் வீடியோ இதோ!

அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி பட ரிலீஸ் திடீரென ஒத்திவைப்பு... காரணம் என்ன? அதிகாரப்பூர்வ அறிக்கை இதோ!
சினிமா

அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி பட ரிலீஸ் திடீரென ஒத்திவைப்பு... காரணம் என்ன? அதிகாரப்பூர்வ அறிக்கை இதோ!

சினிமா

"யோகி பாபுவின் அடுத்த காமெடி சரவெடி ON THE WAY!"- கவனத்தை ஈர்த்த லக்கி மேன் பட கலகலப்பான டீசர் இதோ!