துல்கர் சல்மான் - ராணா டகுபதி இணையும் புதிய படம்... அட்டகாசமான டைட்டில் & அறிவிப்பு போஸ்டர் இதோ!

துல்கர் சல்மான் - ராணா டகுபதி இணையும் புதிய படம் அறிவிப்பு,dulquer salmaan and rana daggubati new movie kaantha announcement | Galatta

துல்கர் சல்மான் மற்றும் ராணா ரகுபதி இணையும் புதிய திரைப்படத்தின் அட்டகாசமான டைட்டில் மற்றும் அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளியானது. மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது இந்திய திரையுலகில் முக்கிய நாயகராக திகழும் துல்கர் சல்மான் நடிப்பில், கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழில் ஹே சினாமிக்கா, மலையாளத்தில் சல்யூட், தெலுங்கில் சீதாராமம், ஹிந்தியில் சுப் - ரிவெஞ் ஆஃப் தி ஆர்டிஸ்ட் என நான்கு மொழிகளில் நான்கு படங்கள் வெளிவந்து ஒவ்வொன்றும் நல்ல வரவேற்பை பெற்றன. அடுத்ததாக துல்கர் சல்மான் நடிப்பில் பக்கா கேங்ஸ்டர் திரைப்படமாக தயாராகி இருக்கும் கிங் ஆப் கோத்தா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் PAN INDIA படமாக வெளிவரவுள்ளது. காரைக்குடியில் படமாக்கப்பட்ட கிங் ஆப் கோட்டா திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த 2023 ஆம் ஆண்டு ஓணம் பண்டிகை வெளியீடாக ஆகஸ்ட் 24ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. 

முன்னதாக முதல் முறை வெப் சீரிஸிலும் களமிறங்கி இருக்கும் துல்கர் சல்மான் நடிப்பில் கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் சீரிஸ் தயாராகி இருக்கிறது. ஃபேமிலி மேன் மற்றும் ஃபர்ஸி உள்ளிட்ட வெப் சீரிஸ் களின் இயக்குனர்களான ராஜ் மற்றும் டி கே இயக்கத்தில் ஹிந்தியில் உருவாகி இருக்கும் கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் சீரிஸ் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு விரைவில் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ரிலீஸாக இருக்கிறது. அடுத்ததாக கடந்த பிப்ரவரி மாதம் தனுஷ் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டாக 100 கோடிக்கு மேல் வசூலித்த வாத்தி திரைப்படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கிறார். வாத்தி படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான சித்தாரா என்டர்டைன்மென்ட்ஸ் , ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் மற்றும் ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு லக்கி பாஸ்கர் என பெயரிடப்பட்டுள்ளதாக துல்கர் சல்மானின் பிறந்த நாளான நேற்று ஜூலை 28ஆம் தேதி அவர்கள் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் துல்கர் சல்மானின் பிறந்தநாளுக்கு மற்றொரு பரிசாக அவரது நடிப்பில் அடுத்து தயாராகும் புதிய திரைப்படம் குறித்து அதிரடி அறிவிப்பும் வெளியானது. நிலா என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் செல்வமணி செல்வராஜ் இந்த புதிய படத்தை எழுதி இயக்குகிறார். லைஃப் ஆஃப் பை படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த இயக்குனர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக்கி இருக்கும் தி ஹன்ட் ஃபார் வீரப்பன் எனும் டாக்குமென்டரி சீரீஸ் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளிவர இருக்கிறது. இவரது அடுத்த படைப்பாக துல்கர் சல்மான் கதையின் நாயகனாக நடிக்கும் இந்த புதிய படத்தை துல்கர் சல்மானின் வேஃபெரர் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடிகர் ராணா டகுபதி தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த புதிய திரைப்படத்திற்கு காந்தா என பெயரிடப்பட்டிருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் அட்டகாசமான புதிய போஸ்டரும் வெளியானது. அந்த போஸ்டர் இதோ…
 

Ever so rarely, we find a story that consumes us and reminds us of the power of good cinema. #Kaantha is the project that brought us together, and we are ecstatic to begin this journey with the immensely talented Dulquer Salmaan and Wayfarer films. On the occasion of his… pic.twitter.com/UHjDHLVVRE

— Rana Daggubati (@RanaDaggubati) July 28, 2023

அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி பட ரிலீஸ் திடீரென ஒத்திவைப்பு... காரணம் என்ன? அதிகாரப்பூர்வ அறிக்கை இதோ!
சினிமா

அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி பட ரிலீஸ் திடீரென ஒத்திவைப்பு... காரணம் என்ன? அதிகாரப்பூர்வ அறிக்கை இதோ!

சினிமா

"யோகி பாபுவின் அடுத்த காமெடி சரவெடி ON THE WAY!"- கவனத்தை ஈர்த்த லக்கி மேன் பட கலகலப்பான டீசர் இதோ!

சினிமா

"D50 - ஆயிரத்தில் ஒருவன் 2 - 7G ரெயின்போ காலனி 2.. இதில் எது?"- ரசிகர்கள் ஆர்வத்தை தூண்டிய செல்வராகவனின் Shooting Spot புகைப்படம் இதோ!