"DREAM PROJECT" எது?- ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்வில் உண்மையை உடைத்த சந்தானத்தின் சுவாரஸ்யமான பதில்! வைரல் வீடியோ உள்ளே

தனது ட்ரீம் ப்ராஜெக்ட் குறித்து பேசிய நடிகர் சந்தானம்,santhanam opens about his dream project in fans festival | Galatta

மக்களின் மனம் கவர்ந்த நகைச்சுவை நடிகராக கொடிகட்டி பறந்த நடிகர் சந்தானம் தற்போது கதாநாயகனாக அவதாரம் எடுத்து தொடர்ச்சியாக நகைச்சுவையை மையப்படுத்திய அட்டகாசமான திரைப்படங்களில் நடித்து மக்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் முன்னதாக பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் கிக் திரைப்படம் மற்றும் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் வடக்குப்பட்டி ராமசாமி என சந்தானம் நடித்துள்ள படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன. இதனிடையே சந்தானத்தின் ஹாரர் காமெடி ட்ரீட்டாக இந்த வாரம் வெளிவந்துள்ள திரைப்படம் தான் DD ரிட்டர்ன்ஸ். 

சந்தானத்துடன் இணைந்து நடிகை சுரபி கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் ரெட்டின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவட், மசூம் ஷங்கர், பெப்சி விஜயன், மொட்டை ராஜேந்திரன், முனீஸ் காந்த், தீனா, விபின், தங்கதுரை, தீபா, சைதை சேது மற்றும் மானசி உள்ளிட்ட பலர் DD ரிட்டன்ஸ் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆர்கே என்டர்டைன்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் C.ரமேஷ் குமார் தயாரிப்பில் ஹாரர் காமெடி திரைப்படமாக இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த DD ரிட்டன்ஸ் திரைப்படத்திற்கு தீபக் குமார் பதி ஒளிப்பதிவில், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்ய OFRO இசை அமைத்திருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸான DD ரிட்டன்ஸ் திரைப்படம் பக்கா என்டர்டெய்னராக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது. 
 
இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் சந்தானம் ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்வு மதுரையில் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட நடிகர் சந்தானம் நம்மோடு பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், “உங்களுக்கு ஒரு ட்ரீம் காம்போ அல்லது இந்த ஒரு ட்ரீம் ப்ராஜெக்ட் நடக்க வேண்டும் நடக்க வேண்டும் என எல்லா நடிகர்களுக்கும் ஒரு ஆசை இருக்கும்.. அந்த மாதிரி உங்களுக்கு ஏதாவது ஆசை இருக்கிறதா? அப்படி இருந்தால் எந்த ஒரு இயக்குனருடைய இயக்கத்தில்… இந்த நடிகர்கள் எல்லாம் அதில் இருந்து… இந்த ஒரு இசையமைப்பாளர்.. என ஒரு ட்ரீம் காம்போ என்று உங்களுக்கு ஏதாவது இருக்கிறதா?” எனக் கேட்ட போது,

"இல்லை அப்படி எதுவுமே இல்லை. இப்போது பண்ணுவதை ஒழுங்காக செய்தால் போதும் இதுக்கு அப்புறம் என்ன ட்ரீம் எல்லாம். இப்போது என்ன கிடைத்திருக்கிறதோ அதை சரியாக செய்ய வேண்டும் அதை திருப்தியாக செய்ய வேண்டும் என்பது தான் என்னுடைய கனவாக இருக்கிறது. இப்போது இந்த படம் செய்திருக்கிறோம். இதை நன்றாக பண்ண வேண்டும் இதற்கு அதிகபட்சம் 100 சதவீதம் பண்ண வேண்டும் என்பதுதான் இருக்கிறது. மற்றபடி பொதுவாக என்னவென்றால் நாம் இங்கே வாழும் போது வேறொரு உலகத்தை நினைத்துக் கொண்டு சந்தோஷப்படுவார்கள். நாம் அப்படி போனால் நன்றாக இருக்கும் அங்க போனால் நன்றாக இருக்கும். இங்கே இருப்பதை நாம் எவ்வளவு சந்தோஷமாக மாற்ற முடியுமோ அதை மாற்ற முயற்சி செய்ய வேண்டும் நான் இப்போது செய்து கொண்டிருக்கும் ப்ராஜெக்டை எனது ட்ரீம் ப்ராஜெக்ட்டாக நினைத்து தான் செய்து கொண்டிருக்கிறேன்." என பதில் அளித்து இருக்கிறார் இன்னும் பல சுவாரசியமான கேள்விகளுக்கு நடிகர் சந்தானம் அட்டகாசமாக பதில் அளித்திருக்கும் அந்த ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்வின் மொத்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

துல்கர் சல்மான் - ராணா டகுபதி இணையும் புதிய படம்... அட்டகாசமான டைட்டில் & அறிவிப்பு போஸ்டர் இதோ!
சினிமா

துல்கர் சல்மான் - ராணா டகுபதி இணையும் புதிய படம்... அட்டகாசமான டைட்டில் & அறிவிப்பு போஸ்டர் இதோ!

'ஆண்டனி தாஸ்' சஞ்சய் தத் பிறந்த நாளுக்கு தளபதி விஜயின் லியோ படக்குழுவின் செம்ம சர்ப்ரைஸ்... அதிரடியான புது GLIMPSE இதோ!
சினிமா

'ஆண்டனி தாஸ்' சஞ்சய் தத் பிறந்த நாளுக்கு தளபதி விஜயின் லியோ படக்குழுவின் செம்ம சர்ப்ரைஸ்... அதிரடியான புது GLIMPSE இதோ!

ஜெயிலர் இசை வெளியீட்டில் அனிருத்தை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... ட்ரெண்டிங் வீடியோ இதோ!
சினிமா

ஜெயிலர் இசை வெளியீட்டில் அனிருத்தை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... ட்ரெண்டிங் வீடியோ இதோ!