லியோ படத்தை தொடர்ந்து அடுத்த பெரிய படத்தில் இணைந்த சஞ்சய் தத்... பிறந்தநாள் ட்ரீட்டாக வந்த அதிரடி அறிவிப்பு இதோ!

பூரி ஜெகன்நாத் ராம் போதினேனி படத்தில் இணைந்த சஞ்சய் தத்,sanjay dutt joins with puri jagannadh ram pothineni in double ismart | Galatta

இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் சஞ்சய் தத், லியோ திரைப்படத்திற்கு பிறகு மற்றொரு பெரிய திரைப்படமாக முன்னணி இயக்குனர் - மாஸ் ஹீரோ கூட்டணியில் இணைந்திருக்கிறார். பாலிவுட் சினிமாவின் பல கோடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் நடிகர் சஞ்சய் தத். இன்று ஜூலை 29ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சஞ்சய் தத் அவர்களுக்கு கலாட்டா குழுமம் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. கடந்த 1971 ஆம் ஆண்டு ரேஷ்மா அவுர் ஷரா எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த ராக்கி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக களம் இறங்கிய நடிகர் சஞ்சய் தத், இதுவரை 130-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 

குறிப்பாக இயக்குனர் ராஜ்குமார் ஹிராணியின் இயக்கத்தில் முதல் படமாக சஞ்சீவ் தத் நடித்த முன்னா பாய் எம்பிபிஎஸ் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதோடு தமிழில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க வசூல்ராஜா எம்பிபிஎஸ் தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க சங்கர் தாதா எம்பிபிஎஸ் கன்னடத்தில் உபேந்திரா நடிக்க உப்பி தாத்தா எம்பிபிஎஸ் என ரீமேக் செய்யப்பட்டு அத்தனை மொழிகளிலும் மெகா ஹிட் ஆனது. ஹிந்தி திரையுலகம் மட்டுமல்லாது தற்போது தென்னிந்திய திரையுலகிலும் கவனம் செலுத்தி வரும் நடிகர் சஞ்சய் தத், இந்திய சினிமாவில் ரெக்கார்ட் பிரேக்கிங் ஹிட்டான கே ஜி எஃப் சாப்டர் 2 திரைப்படத்தில் வில்லனாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார்.

இதன் தொடர்ச்சியாக தமிழ் திரையுலகிலும் காலடி எடுத்து வைத்த நடிகர் சஞ்சய் தத் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் கதை நாயகனாக நடித்திருக்கும் லியோ திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மாஸ்டர் என்னும் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் கூட்டணியில் பக்கா அதிரடி ஆக்சன் பிளாக் திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. இந்த வரிசையில் அடுத்ததாக தற்போது தெலுங்கு சினிமாவில் நடிகராக களமிறங்குகிறார் சஞ்சய் தத்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக தொடர்ந்து பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விஜய் தேவரகொண்ட நடிப்பில் கடைசியாக வெளிவந்த லைகர் திரைப்படம் பெரும் தோல்வியை சந்தித்த நிலையில், தனது அடுத்த படமாக பூரி ஜெகன்நாத் இயக்கும் புதிய படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார். பூரி ஜெகநாத் இயக்கத்தில் ராம் போத்தினேனி கதாநாயகனாக நடிக்க கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த இஸ்மார்ட் ஷங்கர் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிகர் ராம் போத்தினேனி கதாநாயகனாக நடிக்க இப்படத்தின் அடுத்த பாகமாக, தயாராகும் டபுள் இஸ்மார்ட் படத்தில் “பிக் புல்” என்ற வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடிக்கிறார். நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாளுக்கு பரிசாக வெளிவந்த இந்த அதிரடி அறிவிப்பு & போஸ்டர் இதோ…
 

It takes me immense pride to be working with the director of the masses #PuriJagannadh ji and the young energetic Ustaad @ramsayz 🤗

Glad to be Playing the #BIGBULL in this sci-fi mass entertainer #DoubleISMART

Excited to be teaming up with this super-talented team and Looking… pic.twitter.com/SrIAJv6yy1

— Sanjay Dutt (@duttsanjay) July 29, 2023

'ஆண்டனி தாஸ்' சஞ்சய் தத் பிறந்த நாளுக்கு தளபதி விஜயின் லியோ படக்குழுவின் செம்ம சர்ப்ரைஸ்... அதிரடியான புது GLIMPSE இதோ!
சினிமா

'ஆண்டனி தாஸ்' சஞ்சய் தத் பிறந்த நாளுக்கு தளபதி விஜயின் லியோ படக்குழுவின் செம்ம சர்ப்ரைஸ்... அதிரடியான புது GLIMPSE இதோ!

ஜெயிலர் இசை வெளியீட்டில் அனிருத்தை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... ட்ரெண்டிங் வீடியோ இதோ!
சினிமா

ஜெயிலர் இசை வெளியீட்டில் அனிருத்தை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... ட்ரெண்டிங் வீடியோ இதோ!

அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி பட ரிலீஸ் திடீரென ஒத்திவைப்பு... காரணம் என்ன? அதிகாரப்பூர்வ அறிக்கை இதோ!
சினிமா

அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி பட ரிலீஸ் திடீரென ஒத்திவைப்பு... காரணம் என்ன? அதிகாரப்பூர்வ அறிக்கை இதோ!