பவன் கல்யாண் - சாய் தேஜ் காம்போவின் கலக்கலான ப்ரோ… சமுத்திரகனியின் வினோதய சித்தம் ரீமேக் பட அசத்தலான ட்ரெய்லர் இதோ!

சமுத்திரகனியின் வினோதய சித்தம் ரீமேக் ப்ரோ பட ட்ரெய்லர்,samuthirakani power star pawan kalyan in bro movie trailer out now | Galatta

தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர்களில் ஒருவராகவும் இயக்குனராகவும் திகழும் சமுத்திரக்கனி அவர்கள் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த சூப்பர் ஹிட்டான வினோதய சித்தம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்த ப்ரோ திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியானது. கடந்த 2003 ஆம் ஆண்டு வெளிவந்த உன்னை சரணடைந்தேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி நாடோடிகள் திரைப்படத்திற்கு பிறகு மக்கள் மனதில் இடம் பிடித்த இயக்குனர் சமுத்திரக்கனி தொடர்ந்து போராளி, நிமிர்ந்து நில், அப்பா மற்றும் தொண்டன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார். 

இயக்குனர் நடிகர் என மிகச் சிறப்பாக பணியாற்றி வரும் சமுத்திரக்கனி அவர்கள் இந்த 2023 ஆம் ஆண்டில் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த துணிவு திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக முக்கிய கதாபாத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து நான் கடவுள் இல்லை மற்றும் தலைகூத்தல் உள்ளிட்ட திரைப்படங்களில் கதை நாயகனாக நடித்த சமுத்திரகனி அவர்கள் தனுஷ் நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் வெளிவந்த வாத்தி, நடிகர் நானி நடிப்பில் வெளிவந்த தசரா மற்றும் சமீபத்தில் வெளிவந்த விமானம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்தவரும் இந்தியன் 2 மற்றும் ராம்சரண் நடித்தவரும் கேம் சேஞ்சர் உள்ளிட்ட திரைப்படங்களிலும் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் கடைசியாக சமுத்திரகனி இயக்கத்தில் தமிழில் வெளிவந்த வினோதய சித்தம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சூப்பர் ஹிட் ஆனது. தமிழில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது வினோதய சித்தம் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தனது வினோதைய சித்தம் கதையில் சமுத்திரகனி அவர்களே இயக்கி இருக்கும் இந்த ப்ரோ திரைப்படத்திற்கு திரிவிக்ரம் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி இருக்கிறார். தமிழில் சமுத்திரக்கனி நடித்த கதாபாத்திரத்தில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் அவர்கள் தெலுங்கில் நடித்திருக்கிறார். சாய் தேஜ் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர், கெட்டிகா ஷர்மா, பிரம்மானந்தம், சுப்பராஜு, ரோகினி மற்றும் தனிக்கெல்லா பரணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பீப்பிள் மீடியா ஃபாக்டர் மற்றும் ZEE ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவில் நவீன் நூலி படத்தொகுப்பு செய்திருக்கும் ப்ரோ திரைப்படத்திற்கு தமன் இசை அமைத்திருக்கிறார். தமிழ் வினோதைய சித்தம் திரைப்படத்திலிருந்து ரீமேக் செய்யப்பட்டிருக்கும் இந்த ப்ரோ திரைப்படம் தமிழை விட இன்னும் அதிகமான நிறைய பேண்டஸி விஷயங்களை இணைத்திருப்பதால் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வருகிற ஜூலை 28ஆம் தேதி ப்ரோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. இந்த நிலையில் ப்ரோ திரைப்படத்தின் அட்டகாசமான ட்ரெய்லர் தற்போது வெளிவந்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள கலக்கலான அந்த ப்ரோ பட ட்ரெய்லரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

சினிமா

"மாவீரன் பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் கைகோர்த்த காரணம் இது தான்... உண்மையை உடைத்த சிவகார்த்திகேயன்! வைரல் வீடியோ

அதர்வா - கௌதம் மேனன் - 'குட் நைட்' மணிகண்டன் காம்போவின் அதிரடியான புது வெப் சீரிஸ்... விறுவிறுப்பான மத்தகம் டீசர் இதோ!
சினிமா

அதர்வா - கௌதம் மேனன் - 'குட் நைட்' மணிகண்டன் காம்போவின் அதிரடியான புது வெப் சீரிஸ்... விறுவிறுப்பான மத்தகம் டீசர் இதோ!

மடோன் அஸ்வினுடன் மீண்டும் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன்... மாவீரன் பட நன்றி கூறும் விழாவின் ட்ரெண்டிங் வீடியோ!
சினிமா

மடோன் அஸ்வினுடன் மீண்டும் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன்... மாவீரன் பட நன்றி கூறும் விழாவின் ட்ரெண்டிங் வீடியோ!