சூர்யாவின் பிறந்தநாளுக்கு பக்கா மாஸ் ட்ரீட் கொடுத்த கங்குவா படக்குழு... இணையத்தை அதிரவிடும் மிரட்டலான GLIMPSE இதோ!

சூர்யாவின் கங்குவா பட மிரட்டலான முதல் GLIMPSE வெளியீடு,suriya in kanguva movie glimpse out now | Galatta

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் பரிசாக கங்குவா படக்குழு மிரட்டலான முதல் GLIMPSE வீடியோவை வெளியிட்டுள்ளனர். மக்களின் மனம் கவர்ந்த நாயகராகவும் சிறந்த நடிகராகவும் திகழும் நடிகர் சூர்யா இன்று(July 23) தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். உலகம் எங்கும் இருக்கும் பல கோடி ரசிகர்களும் பிரபலங்களும் சூர்யாவின் பிறந்தநாளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கலாட்டா குழுமம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர இருக்கும் ஒவ்வொரு திரைப்படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் முதல் முறையாக இயக்குனர் வெற்றிமாறன் உடன் கைகோர்க்கும் நடிகர் சூர்யா கலைப்புலி.S.தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகும் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார். வாடிவாசல் படத்திற்காக பிரத்யேகமாக காளை ஒன்று ரோபோவாக அனிமேட்ரானிக்ஸ் முறையில் தயாராகி வருகிறது.

இதனிடையே நடிகர் சூர்யாவின் திரைப் பயணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஸ்டுடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்கள் தயாரிப்பில் உருவாகும் கங்குவா திரைப்படத்தை UV கிரியேஷன்ஸ் நிறுவனம் வழங்குகிற பிரம்மாண்ட படைப்பாக மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி வருகிற திரைப்படம் தான் கங்குவா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் கங்குவா திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை திஷா பதாணி கதாநாயகியாக நடிக்கிறார். மிரள வைக்கும் பீரியட் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் கங்குவா திரைப்படம் ஒரு இன்டர்நேஷனல் கதைக்களம் கொண்ட திரைப்படமாக தயாராவதால் ரசிகர்களுக்கு விருந்தாக 3D தொழில்நுட்பத்தில் பத்து மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அட்டகாசமான போர் காட்சிகள் கொண்ட கங்குவா திரைப்படத்தின் VFX பணிகளுக்காக மட்டுமே பல கோடி ரூபாயை செலவிட படக்குழு திட்டமிட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்தாலும் இந்த கிராபிக்ஸ் பணிகள் இருப்பதால் கங்குவா படம் அடுத்த 2024 ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிலன் கலை இயக்கத்தில், வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பு செய்யும் கங்குவா திரைப்படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். துணிவு படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் கங்குவா திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிகபட்சமாக கங்குவா திரைப்படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கான உரிமம் மட்டும் 80 கோடி ரூபாய்க்கு அமேசான் பிரைம் வீடியோவில் வியாபாரம் நடந்துள்ளதாக சமீபத்தில் தயாரிப்பாளர் K.ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் முதல் GLIMPSE வீடியோவை படக் குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் பரிசாக சரியாக 12.01 மணிக்கு வெளிவந்திருக்கும் கங்குவா படத்தில் இந்த GLIMPSE வீடியோ சோசியல் மீடியாவை அதிரவற்றிருக்கிறது. நடிகர் சூர்யா இதுவரை இல்லாத அளவிற்கு மிரட்டலான லுக்கில் "நலமா" எனக் கேட்பதோடு முடியும் மிரள வைக்கும் இந்த GLIMPSE வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

மடோன் அஸ்வினுடன் மீண்டும் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன்... மாவீரன் பட நன்றி கூறும் விழாவின் ட்ரெண்டிங் வீடியோ!
சினிமா

மடோன் அஸ்வினுடன் மீண்டும் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன்... மாவீரன் பட நன்றி கூறும் விழாவின் ட்ரெண்டிங் வீடியோ!

'சூப்பர் ஸ்டார் ரசிகர்களே ரெடியா?'- ரஜினிகாந்தின் அண்ணாத்தக்கு விட்டதை ஜெயிலருக்கு நடத்தும் சன் பிக்சர்ஸ்! வேற லெவல் அப்டேட் இதோ
சினிமா

'சூப்பர் ஸ்டார் ரசிகர்களே ரெடியா?'- ரஜினிகாந்தின் அண்ணாத்தக்கு விட்டதை ஜெயிலருக்கு நடத்தும் சன் பிக்சர்ஸ்! வேற லெவல் அப்டேட் இதோ

சிவகார்த்திகேயனின் நடிப்பிற்கு மாவீரன் பெற்றுக் கொடுத்த தரமான பாராட்டு... வைரலாகும் புது வீடியோ இதோ!
சினிமா

சிவகார்த்திகேயனின் நடிப்பிற்கு மாவீரன் பெற்றுக் கொடுத்த தரமான பாராட்டு... வைரலாகும் புது வீடியோ இதோ!