சிவகார்த்திகேயன் மாவீரனாக மாறியது எப்படி.. இணையத்தில் ரசிகர்களால் வைரலாகும் அசத்தலான வீடியோ இதோ..

மாவீரன் கதாபாத்திரத்தின் கெட்டப் வீடியோவை வெளியிட்ட சிவகார்த்திகேயன் வீடியோ உள்ளே - Sivakarthikeyan shared maaveeran make over video | Galatta

கடந்த ஜூலை 14ம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாவீரன்’. வித்தியாசமான கதைக்களத்தில் முதல் முறையாக மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து உருவாகியிருக்கும் இப்படத்தை விமர்சனங்களால் கொண்டாடப்பட்ட மண்டேலா திரைப்பட இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார். பேண்டசி கலந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவான இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக விருமன் பட நாயகி அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இயக்குனர் மிஷ்கின், சரிதா, சுனில், யோகி பாபு, மோனிஷா, அருவி மதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் படத்தில் கூடுதல் சிறப்பாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிறப்பு கதாபாத்திரத்திற்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். ஷாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஷ்வா தயாரித்த மாவீரன் படத்திற்கு ஒளிப்பதிவாளர் விது அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய பரத் சங்கர் படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியான ‘சீனா சீனா’, ‘வண்ணாரப் பேட்டையில’, ‘வா வீரா’ ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று டிரெண்டிங்க் ஆனது குறிப்பிடத்தக்கது.

அழுத்தமான கதைகளத்துடன் அட்டகாசமான ஆக்ஷன் காட்சிகளுடன் உருவான மாவீரன் படத்தின் அறிவிப்பிலிருந்தே ரசிகர்களிடையே தனி எதிர்பார்ப்பு இருந்து வந்தது அதன்படி கடந்த ஜூலை 14 தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உலகெங்கும் வெளியான மாவீரன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பை அளித்து மாவீரன் திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். ஒரு வாரம் கடந்த நிலையில் இன்றும் பல திரையரங்குகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக மாவீரன் திரைப்படத்தை கண்டு ரசித்து வருகின்றனர். மேலும் ஒரு வார வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிய மாவீரன் திரைப்படம் உலகளவில் ரூ 50கோடிக்கு மேல் வசூலித்து தற்போது நூறு கோடி  பாக்ஸ் ஆபிசை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் நடித்த சத்யா என்ற கதாபாத்திரம் உருவான விதம் குறித்து அந்த பாத்திரத்திற்காக போட்ட மேக்கப்பை சிறப்பு வீடியோ தொகுப்பாக தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவுடன் “SK to Sathya” என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இணையத்தில் ரசிகர்களால் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  தளபதி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கெட்டப்பில் மாவீரன் படத்தில் அசத்தியிருந்த சிவகார்த்திகேயன் தற்போது அவர் உலகநாயகன் கமல் ஹாசன் தயாரிப்பில் இயக்குனர் ராஜ் குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வரும் புதிய படத்திலும் புது விதமான கெட்டப்பை வைத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

 

 

View this post on Instagram

A post shared by Sivakarthikeyan Doss (@sivakarthikeyan)

அலப்பறை கிளப்பும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள்.! ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழா அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.. விவரம் இதோ..
சினிமா

அலப்பறை கிளப்பும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள்.! ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழா அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.. விவரம் இதோ..

மாமன்னன் வெற்றியையடுத்து மாரி செல்வராஜின் ‘வாழை’ படத்தை வியந்து பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்..! – விவரம் உள்ளே..
சினிமா

மாமன்னன் வெற்றியையடுத்து மாரி செல்வராஜின் ‘வாழை’ படத்தை வியந்து பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்..! – விவரம் உள்ளே..

“கூர்வாளை விட கூர்மையான கண்கள் அவனுடையது..” சூர்யாவின் ‘கங்குவா’ படக்குழு கொடுத்த அப்டேட்.. ரசிகர்களிடையே வைரலாகும் Glimpse இதோ..
சினிமா

“கூர்வாளை விட கூர்மையான கண்கள் அவனுடையது..” சூர்யாவின் ‘கங்குவா’ படக்குழு கொடுத்த அப்டேட்.. ரசிகர்களிடையே வைரலாகும் Glimpse இதோ..