தமிழின் பிரபல மியூசிக் சேனல்களில் ஒன்று சன் டிவி நிறுவனத்தின் சன் மியூசிக்.அஞ்சனா,மணிமேகலை,தியா,சங்கீதா,ரியோ,சுரேஷ் என்று சின்னத்திரையில் ஜொலித்து வரும் பலரும் இந்த சேனலில் ஒரு பெரிய பங்காற்றியுள்ளனர்.கடந்த சில வருடங்களாக சன் மியூசிக்கை கலக்கி வந்த ஒருவர் VJ அக்ஷயா.

தனது பேச்சாலும்,அழகாலும் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை இவர் வெகு விரைவில் கைப்பற்றினார்.இவருக்கென்று பல ரசிகர் பக்கங்கள்,போட்டோ வீடியோ எடிட்கள் என்று ரசிகர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.ஹிட்லிஸ்ட்,செம மார்னிங்,நோ ப்ராப்லம் உள்ளிட்ட சூப்பர்ஹிட் ஷோக்களை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியையும் இவர் தொகுத்து வழங்கி இருக்கிறார்.இவரது திருமணம் 2020 செப்டம்பரில் நடைபெற்றது.இதனை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிகப்பெரிய ஹிட் தொடர்களில் ஒன்றான ரோஜா தொடரில் இணைந்தார்.சில மாதங்களுக்கு முன் இணைந்தாலும் ரசிகர்களிடம் இவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

தற்போது தான் கர்பமாக இருக்கும் நற்செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அக்ஷ்யா.இவருக்கு ரசிகர்களும்,பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இவரது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.