இந்திய திரை உலகின் சிறந்த நடிகர்களில் ஒருவராக படத்திற்கு படம் பலவிதமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மகான் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸ் ஆனது. முன்னதாக கடந்த 2019 ஆம் தேதி கடாரம் கொண்டான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில், 3 ஆண்டுகள் இடைவெளிக்கு சீயான் விக்ரமின் கோப்ரா திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.

டிமான்டி காலனி & இமைக்கா நொடிகள் படங்களை தொடர்ந்து இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் கோப்ரா திரைப்படத்தில் கேஜிஎஃப் படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மிருனாளினி ரவி, ரோஷன் மேத்யூ,இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் கோப்ரா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் கோப்ரா திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் கோப்ரா படத்திற்கு ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். நேற்று ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வெளியான கோப்ரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

சீயான் விக்ரமின் மிரட்டலான நடிப்பு, ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள்& அதிரடியான பின்னணி இசை, அட்டகாசமான ஆக்ஷன் காட்சிகளை அனைவரும் பாராட்டி வருகின்றனர். முன்னதாக படக்குழுவினர் அறிவித்திருந்த படத்தின் 3 மணி 3 நிமிடஙக்ள் 3 வினாடிகள் என்ற ரன் டைம் ரிலீசுக்கு முன்பே பேசுபொருளாக இருந்த நிலையில், தற்போது படத்தின் நீளம் எதிர்மறை விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

எனவே கோப்ரா திரைப்படத்தில் 20 நிமிடங்கள் குறைக்கப்படுவதாக செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில்,  "எந்த ஒரு திரைப்படமும் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் நல்ல திரை அனுபவத்தை கொடுக்கவே தயாரிக்கப்படுகிறது. அப்படிக் கொடுக்கப்படும் திரைப்படங்கள் ரசிகர்களின் நேரத்திற்கும் பணத்திற்கும் மதிப்பளிக்கும் வகையில் வழங்கப்படுவதே எங்களுக்கு மகிழ்ச்சியை தரும். எனவே ரசிகர்கள், எங்களது ஊடக நண்பர்கள், விநியோகஸ்தர்கள் அனைவரின் வேண்டுகோளுக்கிணங்க கோப்ரா படத்தில் 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இன்று செப்டம்பர் 1ஆம் தேதி  மாலை முதல் தமிழகம்,ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் 20 நிமிடங்கள் குறைக்கப்பட்ட வெர்ஷனில் கோப்ரா திரைப்படத்தை பார்க்கலாம்" என தெரிவித்துள்ளனர்.

 

We Heard You 🙌#Cobra is now Trimmed by 20 Mins as suggested by film-goers,fans,media friends, distributors & exhibitors 😊

Will be updated from this evening in all the screens ☺️ Do watch & support the film..@chiyaan@AjayGnanamuthu@RedGiantMovies_ @SonyMusicSouth pic.twitter.com/4a4mlnYOF2

— Seven Screen Studio (@7screenstudio) September 1, 2022