தனது ஒவ்வொரு திரைப்படங்களின் வாயிலாகவும் சமூகத்தில் தேவையான ஆரோக்கியமான விவாதங்களை ஏற்படுத்திய இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் நேற்று ஆகஸ்ட் 31-ஆம் தேதி ரிலீஸான நட்சத்திரம் நகர்கிறது திரைப்படமும் பல இன்றியமையாத முக்கிய விவாதங்களை ஏற்படுத்த அடியெடுத்து வைத்துள்ளது.

இந்திய திரை உலகில் இதுவரை அதிகம் யாரும் தொடாத & பேசவே தயங்கிய, ஆனால் பேச வேண்டிய மனித இனத்தின் காதலின் மிக முக்கிய பகுதியை மிகுந்த தைரியத்துடனும் அழுத்தமாகவும் பேசியுள்ள, பா.ரஞ்சித் அவர்கள், நட்சத்திரம் நகர்கிறது படத்திற்காக வழக்கமான தனது அணியுடன் இல்லாமல் முழுக்க புது அணியினருடன் பயணம் செய்துள்ளார்.

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து வழங்கும் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் மற்றும் “டான்சிங் ரோஸ்” ஷபீர் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். கிஷோர் குமாரின் ஒளிப்பதிவில், நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு டென்மா இசையமைத்துள்ளள்ளார்.

ரிலீசுக்கு முன்பே இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் மற்றும் பிரபலங்களின் பாராட்டு மழையில் நனைந்த நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தை தற்போது திரையரங்குகளில் கண்டு ரசித்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்திலிருந்து முக்கிய காட்சி தற்போது SNEAK PEEK வீடியோவாக வெளியாகி உள்ளது. கவனம் ஈர்க்கும் அந்த SNEAK PEEK வீடியோ இதோ…