பிரபல Radio தொகுப்பாளராக இருந்து ,சினிமாவில் காமெடியனாக மாறி அடுத்து ஹீரோ மற்றும் இயக்குனர் ஆக வளர்ந்து நிற்பவர் RJ பாலாஜி.நானும் ரௌடி தான் இவர் ஹீரோவாக நடித்த LKG திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து RJ பாலாஜி நயன்தாராவுடன் இணைந்து நடித்த மூக்குத்தி அம்மன் படம் கொரோனா காரணமாக நேரடியாக ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார் RJ பாலாஜி.மூக்குத்தி அம்மன் படத்தினை RJ பாலாஜி இயக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

RJ பாலாஜி நடிக்கும் அடுத்த படத்தினை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த படம் பதாய் ஹோ என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் என தகவல்கள் கிடைத்துள்ளன.இந்த படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன் நிறைவுபெற்றது.

தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் மார்ச் 18ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.