தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை குஷ்பூ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரையில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்த நடிகை குஷ்பூ சின்னத்திரையிலும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராகவும் நடுவராகவும் கலந்துகொண்டு கலக்கியவர். 

குறிப்பாக தமிழில் பல மெகா தொடர்களில் நடித்து சீரியல் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்த குஷ்பூ தயாரிப்பாளராகவும் சினிமாவில் பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார். இதனையடுத்து நடிகை குஷ்பூ நடிக்கும் புதிய மெகா தொடரான மீரா சீரியலின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் தொடங்கியது. 

முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள மீரா மெகா தொடரில் மீரா மெகா தொடரில் கதாசிரியராகவும் குஷ்பூ பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை குஷ்பூ மற்றும் நடிகர் சுரேஷ் மேனன் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் மீரா மெகா தொடரின் ப்ரோமோ வீடியோ இன்று (மார்ச் 4ஆம் தேதி) ரிலீசானது.

இந்த ப்ரோமோ வீடியோவில் பெண்கள் மீதான ஆண்களின் அடக்குமுறையும் வன்முறையும் சரியா தவறா என நடிகை குஷ்பூ மக்களைப் பார்த்து கேள்வி எழுப்பி தவறு என்றால் 7095511111 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கவும் என தெரிவித்துள்ளார். மேலும் #StandWithMeera என்ற ஹேஷ்டாகும் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ள அந்த ப்ரோமோ இதோ…