ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பூவே பூச்சூடவா.டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதில் வெற்றி பெற்று பூவே பூச்சூடவா தொடரின் ஹீரோயினாக உருவெடுத்வர் ரேஷ்மா.சீரியலிலும் தனது நடிப்பால் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார்.

இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் மதன் பாண்டியனை காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தொடரின் நாயகி ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புத்தாண்டு அன்று தெரிவித்திருந்தார்.

இந்த தொடர் 1000 எபிசோடுகளை கடந்து பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.இந்த தொடர் விரைவில் நிறைவடைய உள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.சில நாட்களுக்கு முன் ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிடுவதாக ரேஷ்மா தெரிவித்திருந்தார்.இது புதிய சீரியல் குறித்த அறிவிப்பு என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

தற்போது கலர்ஸ் தமிழில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள அபி டெய்லர் என்ற தொடரில் ரேஷ்மா ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த சீரியலின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.இந்த ப்ரோமோ சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.இந்த ப்ரோமோ வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.