திரையுலகில் அனைவரும் விரும்பும் நடிகராக திகழ்பவர் நடிகர் ராணா டகுபதி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் தல அஜித்துடன் ஆரம்பம் படத்தில் நடித்திருந்தார். பாகுபலி படத்தில் இவரது நடிப்பை கண்ட ரசிகர்கள் கொண்டாட துவங்கினர். தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் காடன் திரைப்படத்தில் நடித்துள்ளார். 

தெலுங்கு நடிகர் ராணா அவரது காதலி மிஹிகா பஜாஜ் என்பவரை கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமணம் மிக எளிமையாக நடைபெற்றது. அதில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மிக மிக நெருக்கமான நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். சமந்தா, நாக சைதன்யா, வெங்கடேஷ், அல்லு அர்ஜுன், ராம் சரண் உள்ளிட்ட தெலுங்கு சினிமா துறையின் நட்சத்திரங்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். 

கொரோனா காரணமாக அதிக அளவு விருந்தினர்கள் கலந்து கொள்வதில் சிக்கல் இருந்ததால், சுமார் 30 பேர் மட்டுமே அதில் கலந்து கொண்டதாக கூறப்பட்டது. மேலும் மற்றவர்கள் திருமண நிகழ்வை பார்ப்பதற்காக விஆர் மூலமாக நேரடி நேரடி ஒளிபரப்பு செய்திருந்தார்கள். ராணா மற்றும் மிஹிகாவின் திருமண புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் இணையத்தில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. 

இது கொரோனா காலகட்டம் என்பதால் தான் ராணா திருமணம் மிகவும் எளிமையாக நடந்திருக்கிறது. நிலைமை சீராக இருந்தால் ஒட்டு மொத்த தெலுங்கு சினிமா உலகமும் ஒன்று கூடி கொண்டாடி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் ராணா தன்னுடைய ஹனிமூன் பிளான் பற்றி பேசியிருக்கிறார். பிரபல பாலிவுட் நடிகை நேஹா தூபியா No Filter Neha என்ற ஒரு டாக் ஷோ நடத்தி வருகிறார். 

அதில் அவர் இந்திய சினிமா துறையில் பல முன்னணி நட்சத்திரங்களை தொடர்ந்து பேட்டி எடுத்து வருகிறார். அதன் ப்ரோமோ வீடியோவை தற்போது இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டிருக்கிறார் அவர். அதில் பிரபலங்களை அவர் ஜூம் காலில் பேட்டி எடுத்திருப்பது காட்டப்பட்டு இருக்கிறது. அதில் ராணாவும் தன்னுடைய தேன்நிலவு பிளான் பற்றி பேசிய ஒரு சிறிய காட்சி இடம் பெற்றிருக்கிறது. கொரோனா பிரச்சனை இல்லாமல் இருந்திருந்தால் நான் இப்போது ஆம்ஸ்டர்டாமில் இருந்திருப்பேன் என தெரிவித்திருக்கிறார்.

எனக்கு ஆர்ட் அதிகம் பிடிக்கும் எனவும் குறிப்பிட்டிருக்கிறார் அவர். ராணா இப்படி கூறியதை ஒப்புக் கொண்ட நேஹா தூபியா, ஹனி மூன் செல்வதற்கு ஆம்ஸ்டர்டாம் சிறந்த இடம் என்று கூறுகிறார். அந்த வீடியோ இதோ. ராணா மட்டுமின்றி அந்த ப்ரோமோ வீடியோவில் ராகுல் டிராவிட், கபில் தேவ், சைஃப் அலி கான், அதிதி ராவ், கபீர் கான், ஆதித்யா ராய் கபூர், பூமி பட்நேகர் உள்ளிட்ட பலர் இடம் பெற்றிருக்கிறார்கள்.