நாமக்கல் அருகே பெற்ற மகளையே தந்தை பாலியல் பலாத்காரம் செய்ததால், 11 ஆம் வகுப்பு படிக்கும் மகள் 5 மாத கர்ப்பம் அடைந்து உள்ளார். 

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி அருகில் உள்ள வடுகப்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி, அந்த பகுதியில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், சிறுமி வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். 

அதே நேரத்தில், பாலசுப்பிரமணியின் மனைவி வேலைக்குச் சென்று வந்துள்ளார். அப்போது, ஏதோ ஒரு காரணத்தில் மகள் மீது சபலப்பட்ட தந்தை பாலசுப்பிரமணி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெற்ற மகள் என்றும் பார்க்காமல், பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஒரு முறை அல்லது 

இருமுறை அல்ல, காமம் பெருக்கெடுக்கும் போதெல்லாம் மகளைப் பலமுறை தந்தையே பலவந்தமாகத் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால், தந்தையின் இந்த செயலால் கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, மனதிற்குள் நொந்து தினம் தினம் செத்துப் பிழைத்து உள்ளார்.

மகளைத் தந்தையை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததால், அந்த சிறுமியின் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளது. சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை அவரது தாயார் கண்டுபிடித்து உள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், இது குறித்து சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது, அழுதுகொண்டே தனக்குத் தந்தையால் நேர்ந்த பாலியல் பலாத்காரம் குறித்துக் கூறி கதறி அழுதுள்ளார்.

இதனைக் கேட்டு சிறுமியின் தாய் மற்றும் அவரது உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். மேலும், இது குறித்து தகவல் மாவட்ட குழந்தைகள் நல வாரியத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

இது தொடர்பாக அங்கு விரைந்து வந்த மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள், சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி 5 மாதம் கர்ப்பிணியாக இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனால், சிறுமியின் உறவினர்கள் இன்னும் அதிர்ச்சியடைந்தனர்.

அத்துடன், இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, சிறுமியின் தந்தை பாலசுப்பிரமணியத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.