மானாட மயிலாட நடன நிகழ்ச்சியின் மூலம் மீடியாவிற்குள் என்ட்ரி கொடுத்தவர் நிஹாரிகா.இதனை தொடர்ந்து ரம்யாகிருஷ்ணன் நடித்த வம்சம் தொடரில் நடித்து சீரியல் நடிகையாக அறிமுகமானார்.தெலுங்கிலும் ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்தினார் நிஹாரிகா.

இதனை அடுத்து படங்களில் அறிமுகமான இவர் சக்கபோடு போடு ராஜா,எனக்கு வாய்த்த அடிமைகள் உள்ளிட்ட படஙகளில் முக்கிய வேடத்தில் நடித்தார்,இவற்றை தவிர வட்டம்,உன்னால் என்னால்,எவனும் புத்தனில்லை போன்ற படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார் நிஹாரிகா.

ராஜா ராணி சீசன் 2வில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார் நிஹாரிகா,அடுத்ததாக வேலைக்காரன் தொடரிலும் இவர் முக்கிய வேடத்தில் நடித்தார்,இவற்றை தவிர ஜீ தமிழின் வித்யா நம்பர் 1 தொடரில் நடித்து வருகிறார் இந்த தொடர் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.இவர் இயக்குனர் ரஜித்தை காதலித்து கரம்பிடித்தார்.

அடுத்ததாக கணவர் இயக்கத்தில் தயாராகும் படத்திலும் நடித்து வருகிறார்.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் அவ்வப்போது தனது வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.புதிதாக சில மாதங்களுக்கு முன் யூடியூப் சேனல் தொடங்கிய நிஹாரிகா,சமீபத்தில் முடிந்த அவரது திருமண நாள் கொண்டாட்டம் குறித்து ஒரு வீடீயோவை பகிர்ந்துள்ளார்.தனது கணவருடன் ரொமான்டிக்காக விழாவை கொண்டாடிய இந்த வீடியோ வைரலாகி வருகிறது.