தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.இவரது ஜகமே தந்திரம் படம் சமீபத்தில் OTT-யில் வெளியானது.

இதனை தொடர்ந்து தனுஷ் மாறன்,அத்ராங்கி ரே,ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம்,தி கிரே மேன்,செல்வராகவன் இயக்கத்தில் வி க்ரியேஷன் தயாரிப்பில் நானே வருவேன்,வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம்,ஆயிரத்தில் ஒருவன் 2,சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.

ஹிந்தியில் அக்ஷய் குமாருடன் இணைந்து தனுஷ் அத்ரங்கி ரே படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தை பிரபல இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்குகிறார்.சாரா அலி கான் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி கிறிஸ்த்துமஸை முன்னிட்டு நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் தமிழிலும் டப் ஆகி வெளியாகிறது.இந்த படத்தில் தனுஷ் பாடிய லிட்டில் லிட்டில் பாடல் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.தனுஷ் ரஹ்மான் இசையில் பாடிய முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்