வர்த்தகத்தில் தளபதி விஜயின் லியோ படத்தை சூர்யா42 தாண்டியதா? சரியான விளக்கம் கொடுத்த முன்னணி தயாரிப்பாளர்! வீடியோ உள்ளே

லியோ மற்றும் சூர்யா42 வர்த்தகம் குறித்து பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன்,producer dhananjayan about pre release business of leo and suriya 42 | Galatta

தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகர்களான நடிகர் சூர்யா மற்றும் தளபதி விஜய் ஆகியோரின் அடுத்தடுத்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திருக்கின்றன. குறிப்பாக நடிகர் சூர்யா தனது அடுத்த திரைப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்தில் இணைகிறார். இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் வெற்றிமாறன் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி இதுவரை அதிகம் யாரும் அறிந்திடாத ஜல்லிக்கட்டின் முக்கிய விஷயங்களை அழுத்தமாக பேசும் திரைப்படமாக தயாராகும் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு வெகு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் சிவா இயக்கும் சூர்யா42 படத்தில் தற்போது சூர்யா நடித்து வருகிறார்.

ஸ்டுடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் சூர்யா 42 திரைப்படம் பிரம்மாண்டமாக 3D தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது மேலும் திரைப்படத்தை இந்தியாவின் 10 மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே சூர்யா 42 திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் ப்ரோமோ வீடியோ ஏப்ரல் மாதத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பெரிய பட்ஜெட்டில் பீரியட் திரைப்படமாக தயாராகும் சூர்யா 42 திரைப்படம் வர்த்தகத்தில் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தை விட அதிக வியாபாரம் செய்திருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.

தளபதி விஜய் தனது 67 வது திரைப்படமாக மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் லியோ திரைப்படத்தில் இணைந்துள்ளார். விக்ரம் திரைப்படத்தின் இமாலய வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ திரைப்படத்தின் மீதும் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லியோ திரைப்படத்தை விட சூர்யா 42 திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே அதிக வர்த்தகம் செய்திருப்பதாக பரவி வரும் செய்திகளுக்கு முன்னணி தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் பதில் அளித்துள்ளார். 

முன்னதாக நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு கொடுத்த பபேட்டியில் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட தனஞ்செயன் அவர்கள் லியோ - சூர்யா 42 வர்த்தகம் குறித்து பேசியபோது, "இது எப்படி என்றால் ஆளாளுக்கு, நீ 400 சொன்னால் நான் 500 சொல்கிறேன். நீ 500 சொல்கிறாயா நான் 600 சொல்கிறேன். அந்தக் கட்டத்தில் தான் பேசுகிறார்கள். ஒரு வர்த்தகத்தை வெளிப்படையாக சொல்லக் கூடிய ஒரு வழிமுறை இங்கே இல்லை. அதை நாம் சொல்லவும் முடியாது. எனவே இவை எல்லாமே வெறும் கணிப்பு தான். உண்மை என்ன என்பது அந்தந்த தயாரிப்பாளர்களுக்கு தான் தெரியும். ஆனால் ஒன்றை மட்டும் என்னால் சொல்லிவிட முடியும் சூர்யா அவர்களின் திரை பயணத்திலேயே அதிக வர்த்தகம் செய்த படமாக சூர்யா42 இருக்கும்" என தெரிவித்துள்ளார். அந்த முழு பேட்டி இதோ…
 

'ரஞ்சிதமே பாடலை இன்னும் நல்லா பண்ணிருக்கலாம்!'- அதிரடியான பதிலளித்த முன்னணி நடன இயக்குனரின் மகள்! வீடியோ இதோ
சினிமா

'ரஞ்சிதமே பாடலை இன்னும் நல்லா பண்ணிருக்கலாம்!'- அதிரடியான பதிலளித்த முன்னணி நடன இயக்குனரின் மகள்! வீடியோ இதோ

சூர்யாவின் பிரம்மாண்டமான சூர்யா42 பட அதிரடியான ப்ரோமோ ரிலீஸ் குறித்து பரவும் தகவல்கள்... விளக்கமளித்த முன்னணி தயாரிப்பாளர்!
சினிமா

சூர்யாவின் பிரம்மாண்டமான சூர்யா42 பட அதிரடியான ப்ரோமோ ரிலீஸ் குறித்து பரவும் தகவல்கள்... விளக்கமளித்த முன்னணி தயாரிப்பாளர்!

'பிறந்தநாள் வாழ்த்துகள் என் சகோதரனே, மகனே!'- லோகேஷ் கனகராஜுக்கு சஞ்சய் தத்தின் அன்பு வார்த்தைகள்! ட்ரெண்டாகும் புகைப்படம் இதோ
சினிமா

'பிறந்தநாள் வாழ்த்துகள் என் சகோதரனே, மகனே!'- லோகேஷ் கனகராஜுக்கு சஞ்சய் தத்தின் அன்பு வார்த்தைகள்! ட்ரெண்டாகும் புகைப்படம் இதோ