தளபதி 68: "எப்படி போயிட்டு இருக்கு?"- தளபதி விஜய் ரசிகர்களுக்கு படப்பிடிப்பு குறித்து வேற லெவல் அப்டேட் கொடுத்த படக்குழு! விவரம் உள்ளே

தளபதி விஜயின் தளபதி 68 பட ஸ்பெஷல் அப்டேட் கொடுத்த படக்குழு,producer archana kalpathi shared thalapathy 68 update vijay | Galatta

ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் தளபதி விஜய் & இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியின் தளபதி 68 திரைப்படத்தின் ஸ்பெஷல் அப்டேட்டை படக்குழு தற்போது பகிர்ந்துள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்களின் ஒருவராக விளங்கும் விராட் கோலி தற்போது நடைபெற்று வரும் 2023 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அசத்தி வருகிறார் அந்த வகையில் இன்று நவம்பர் 15 ஆம் தேதி நடைபெற்று வரும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரை இறுதி போட்டிகள் சதம் அடித்த விராட் கோலி அட்டகாசமான புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார் உலக அளவில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிகபட்சமாக 49 சதங்கள் அடித்த மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 50 சதங்கள் எடுத்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற மாபெரும் சாதனையை விராட் கோலி எட்டி இருக்கிறார். இந்த சாதனைக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் தளபதி 68 படத்தின் தயாரிப்பாளர் ஐம்பதாவது சதம் அதை மிகவும் சிரமமின்றி செய்து விட்டார் என X பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த பதிவுக்கு பதில் அளித்த தளபதி விஜயின் ரசிகர் ஒருவர் நம்ம தளபதி 68 எப்படி போயிட்டு இருக்கு என கேட்க அதற்கு ஒற்றை வரியில் "ALL IS WELL" என தயாரிப்பாளர் பதிலளித்திருக்கிறார். அவரது இந்த பதிலால் தற்போது தளபதி விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்து இருக்கின்றனர். அந்த பதிவு இதோ...

 

50th 100 and he makes it look effortless @imVkohli 🔥🔥

— Archana Kalpathi (@archanakalpathi) November 15, 2023

கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளிவந்த தளபதி விஜயின் லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக வெளிவந்த லியோ திரைப்படத்தின் மாபெரும் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை தொடர்ந்து தற்போது தனது 68வது படமாக தயாராகி வரும் தளபதி 68 படத்தில் விஜய் முழு கவனம் செலுத்தி வருகிறார். இந்த அக்டோபர் மாதத்தில் தொடங்கிய தளபதி 68 திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த கட்டமாக கடந்த சில தினங்களாய் தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வந்தது. மிரட்டலான ஆக்சன் காட்சிகள் தாய்லாந்து நாட்டில் படமாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன. கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு தளபதி 68 திரைப்படத்தின் படப்பிடிப்பை தாய்லாந்து நாட்டில் முடித்து தளபதி விஜய் சென்னை திரும்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.   

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல்முறையாக விஜய் நடிக்கும் தளபதி 68 திரைப்படத்தை இயக்குகிறார். தளபதி விஜய் உடன் இணைந்து மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக நடிக்கும் தளபதி 68 திரைப்படத்தில், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, ஜெயராம், மோகன், யோகி பாபு, அஜ்மல், விடிவி கணேஷ், வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோர் உடன் பிரேம்ஜி அமரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுணி தளபதி 68 திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய வெங்கட்ராஜன் படத்தொகுப்பு செய்கிறார். ராஜீவன் அவர்களின் கலை இயக்கத்தில் அதிரடி ஆக்சன் படமாக உருவாகும் இந்த தளபதி 68 திரைப்படத்திற்கு திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றுகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் தளபதி 68 திரைப்படத்தில் மதன் கார்க்கி அவர்கள் பாடலாசிரியராக பணியாற்றுகிறார்.