தளபதி விஜயின் லியோ படத்திலிருந்து விலகலா..? வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த த்ரிஷா! வைரல் புகைப்படம் உள்ளே

லியோ படப்பிடிப்பு தளத்தின் புகைப்படத்தை வெளியிட்ட திரிஷா,trisha status from kashmir thalapathy vijay in leo movie | Galatta

இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதியா 67 திரைப்படமான லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பில் மும்மரமாக பணியாற்றி வருகிறார். இதுவரை எந்த தமிழ் திரைப்படத்திற்கும் இல்லாத அளவிற்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை இந்திய திரை உலகில் ஏற்படுத்தியிருக்கும் லியோ திரைப்படத்தின் அறிவிப்பு ப்ரோமோ சமீபத்தில் வெளிவந்த ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனௌன் மற்றும் மிஸ்கின், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலி கான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜின் படத்தொகுப்பில், அன்பறிவு மாஸ்டர்களின் ஸ்டன்ட் இயக்கத்தில், சதீஷ்குமாரின் கலை இயக்கம் செய்யும், லூயோ படத்தில் தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS.லலித்குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ம் தேதி தொடங்கி தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே தற்போது காஷ்மீரில் நடைபெற்று வரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பிலிருந்து திடீரென நடிகை த்ரிஷா விலகியதாக சமூக வலைதளங்களில் தேவையற்ற வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை த்ரிஷா காஷ்மீரில் இருக்கும் புகைப்படத்தையும் வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் பதிவிட்டு சைலண்டாக பதிலடி கொடுத்துள்ளார்.
jailer acton director stun shiva met super star rajinikanth with his sons

இசைஞானியுடன் கைக்கோர்த்த தனுஷின் மயக்கும் குரலில் 'ஒன்னோட நடந்தா!' - வெற்றிமாறனின் விடுதலை பட முதல் பாடல் இதோ!
சினிமா

இசைஞானியுடன் கைக்கோர்த்த தனுஷின் மயக்கும் குரலில் 'ஒன்னோட நடந்தா!' - வெற்றிமாறனின் விடுதலை பட முதல் பாடல் இதோ!

அதிரடி ஆக்ஷன் படத்தின் ஸ்டண்ட் காட்சி படப்பிடிப்பில் காயமடைந்த அருண் விஜய்... சிகிச்சை பெறும் புகைப்படங்கள் வெளியீடு!
சினிமா

அதிரடி ஆக்ஷன் படத்தின் ஸ்டண்ட் காட்சி படப்பிடிப்பில் காயமடைந்த அருண் விஜய்... சிகிச்சை பெறும் புகைப்படங்கள் வெளியீடு!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் - பிக் பாஸ் கவினின் கலக்கலான டாடா... கலகலப்பான ஸ்னீக் பிக் வீடியோ இதோ!
சினிமா

ரெட் ஜெயன்ட் மூவிஸ் - பிக் பாஸ் கவினின் கலக்கலான டாடா... கலகலப்பான ஸ்னீக் பிக் வீடியோ இதோ!