தன்னிகரற்ற நடிகராக தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை உருவாக்கி ஆகச்சிறந்த நடிப்பின் மன்னனாக திகழும் நடிகர் தனுஷ் அடுத்ததாக அதிரடியான பீரியட் திரைப்படமாக ராக்கி & சாணிக் காயிதம் படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தற்போது நடித்த வருகிறார்.
இதனைத்தொடர்ந்து தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் அடுத்ததாக தனுஷ் நடிக்கிறார். இதனிடையே முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் வாத்தி (SIR).
தனுஷுடன் இணைந்து சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோர் வாத்தி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். J.யுவராஜ் ஒளிப்பதிவில், நவீன் நூலி படத்தொகுப்பு செய்ய, வாத்தி திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்க, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிடும் வாத்தி திரைப்படம் வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த வாத்தி திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியானது. அதிரடியான அந்த ட்ரெய்லர் இதோ…