தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனி தொடர்ந்து நடிகராகவும் தொடர்ந்து சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தார். மேலும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இயக்கி நடித்து இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார் விஜய் ஆண்டனி.

முன்னதாக விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான அக்னிச்சிறகுகள், காக்கி, தமிழரசன் ஆகிய திரைப்படங்கள் நிறைவடைந்து விரைவில் ரிலீஸாக காத்திருக்கின்றன.மேலும் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் மற்றும் தமிழ் படம் பட இயக்குனர் C.S.அமுதன் இயக்கத்தில் ரத்தம் ஆகிய விஜய் ஆண்டனியின் திரைப்படங்களின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதனிடையே விஜய் ஆண்டனி நடிப்பில் முற்றிலும் மாறுபட்ட க்ரைம்-சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக தயாராகியுள்ள திரைப்படம் கொலை. இயக்குனர் பாலாஜி.K.குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து கொலை படத்தில் ரித்திகா சிங் கதாநாயகியாக நடிக்க ராதிகா சரத்குமார், மீனாக்ஷி சௌத்ரி, முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள கொலை படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவில், கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கொலை திரைப்படத்தின் முதல் பாடலாக நீர் குமிழோ பாடல் வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

The 1st single from #KOLAI #கொலை #Neerkumizho sung by @sidsriram is releasing on 12th Aug @ 6.00 Pm.@DirBalajiKumar @ritika_offl @Meenakshiioffl @FvInfiniti @lotuspictures1 @bKamalBohra @dhananjayang @pradeepfab @siddshankar_ @DoneChannel1 @thinkmusicindia @CtcMediaboy pic.twitter.com/borAP3Bke4

— vijayantony (@vijayantony) August 10, 2022