தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் கோமாளி. 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் அம்சங்கள் நிறைந்த திரைப்படமாக, தனது முதல் படத்திலேயே இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.

இதனையடுத்து தனது இரண்டாவது திரைப்படத்தில் நடிகராக அவதாரம் எடுத்துள்ள பிரதீப் ரங்கனதன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் லவ் டுடே. பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து இவானா கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரவீனா, ஆதித்யா கதிர், ஆஜித் காலிக், விஜய் வரதராஜ் மற்றும் FINALLY பாரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள லவ் டுடே திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற நவம்பர் மாதம் 4-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப்.E. ராகவ் படத்தொகுப்பு செய்துள்ள, லவ் டுடே திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

சமீபத்தில் வெளிவந்த லவ் டுடே திரைப்படத்தின் டிரைலர் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இயக்குனர் பிரதீப் ரங்கனதனின் லவ் டுடே திரைப்படத்தின் சென்சார் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சென்சாரில் லவ் டுடே திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

It's U/A Certified! #Lovetoday In theatres from Nov 4th!

A @pradeeponelife show✨
A @thisisysr Vibe 🥁@Ags_production #KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh @RedGiantMovies_ @Udhaystalin @archanakalpathi @MShenbagamoort3 @aishkalpathi @venkat_manickam pic.twitter.com/6sAmUNyvky

— Nikil Murukan (@onlynikil) October 26, 2022