ஹிப் ஹாப் தமிழா ஆதியின் சூப்பர் ஹீரோ வீரன் பட புது ட்ரீட்… சர்ப்ரைஸாக வந்த பப்பர மிட்டா வீடியோ பாடல் இதோ!

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் வீரன் பட பப்பர மிட்டா வீடியோ பாடல்,Hiphop tamizha adhi in veeran movie papara mitta video song | Galatta

கலக்கலான சூப்பர் ஹீரோவாக அசத்திருக்கும் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் வீரன் திரைப்படத்தின் பப்பர மிட்டா வீடியோ பாடல் வெளியானது. ஆரம்ப கட்டத்தில் சுயாதீன இசை கலைஞராக தனது பயணத்தை தொடங்கி அட்டகாசமான பாடல்களால் ரசிகர்களின் மனதை வென்ற ஹிப் ஹாப் தமிழா அது தொடர்ந்து தமிழ் சினிமாவில் களமிறங்கினார். தமிழ் சினிமாவின் மிக முக்கிய இசையமைப்பாளர் நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக தற்போது வலம் வரும் ஹிப் ஹாப் தமிழா ஆதி அடுத்ததாக PT Sir எனும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் PT Sir திரைப்படத்தை நெஞ்சமுண்டு நேர்மையுண்டு திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கி வருகிறார். விளையாட்டு ஆசிரியர் கதாபாத்திரத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் PT Sir திரைப்படத்தின் படப்பிடிப்பு கோயமுத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் நடிப்பில் வித்தியாசமான சூப்பர் ஹீரோ திரைப்படமாக தயாராகி இருக்கும் படம் தான் வீரன். முன்னதாக நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற மின்னல் முரளி திரைப்படத்தின் சாயல் வீரன் திரைப்படத்தில் இருப்பதாக பலதரப்பட்ட விமர்சனங்கள் ஆரம்பத்தில் எழுந்தன. ஆனால் மின்னல் முரளி திரைப்படத்திற்கும் வீரன் திரைப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மின்னல் முரளி படத்தின் இயக்குனர் பேசில் ஜோசப் அவர்களே தெரிவித்திருந்தார். மரகத நாணயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த இயக்குனர் ARK.சரவண் எழுதி இயக்கியுள்ள வீரன் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ளனர். 

ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் இணைந்து வினய், ஆதிரா ராஜ், முனீஸ் காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் வீரன் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தீபக் D மேனன் ஒளிப்பதிவில் பிரசன்னா.GK படத்தொகுப்பு செய்ய, வீரன் திரைப்படத்திற்கு மகேஷ் மேத்யூ ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிட கடந்த ஜூன் 2ம் தேதி வீரன் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸானது. பக்கா ஃபேமிலி என்டர்டைனர் படமாகவும் வித்தியாசமான சூப்பர் ஹீரோ படமாகவும் வீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் வீரன் திரைப்படத்தின் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்றான பப்பர மிட்டா பாடலின் முழு வீடியோ பாடலை படக் குழுவினர் தற்போது சர்ப்ரைஸாக வெளியிட்டுள்ளனர். ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் வீரன் படத்தின் பப்பர மிட்டா பாடல் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
 

சினிமா

"நா ரெடி"- தளபதி விஜயின் பிறந்தநாள் ட்ரீட்டாக வரும் லியோ பட முதல் பாடல்... பக்கா மாஸ் அறிவிப்பால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா

"தியேட்டருக்குள் புகுந்த குரங்கு!"- ஆதிபுரூஷ் படம் பார்க்க ஆஞ்சநேயர் வந்ததாக கொண்டாடிய ரசிகர்கள்! வைரல் வீடியோ

அசோக் செல்வன் - சரத்குமாரின் செம்ம த்ரில்லர் போர் தொழில் உருவான விதம்... ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் அட்டகாசமான வீடியோ இதோ!
சினிமா

அசோக் செல்வன் - சரத்குமாரின் செம்ம த்ரில்லர் போர் தொழில் உருவான விதம்... ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் அட்டகாசமான வீடியோ இதோ!