விக்ரம் பிரபு - வாணி போஜனின் ஆக்சன் திரில்லர் பாயும் ஒளி நீ எனக்கு...  கவனம் ஈர்க்கும் அதிரடியான ட்ரெய்லர் இதோ!

விக்ரம் பிரபு - வாணி போஜனின் பாயும் ஒளி நீ எனக்கு பட ட்ரெய்லர்,vikram prabhu in paayum oli nee yenakku movie trailer | Galatta

அதிரடி ஆக்சன் திரில்லர் திரைப்படமாக விக்ரம் பிரபு மற்றும் வாணி போஜன் இணைந்து நடித்திருக்கும் பாயும் ஒளி நீ எனக்கு திரைப்படத்தின் அதிரடியான ட்ரெய்லர் தற்போது வெளிவந்துள்ளது. இயக்குனர் பிரபு சாலமனின் கும்கி திரைப்படத்தில் தொடங்கி இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு என தொடர்ச்சியாக பல்வேறு விதமான கதைக்களங்கள் கொண்ட திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் விக்ரம் பிரபு கதை நாயகனாக நடித்த கடைசி திரைப்படமாக வெளிவந்த டாணாக்காரன் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பும் பாராட்டுகளையும் பெற்றது. இயக்குனர் தமிழ் இயக்கத்தில் இதுவரை பலரும் அறிந்திடாத அதிகம் பேசப்படாத காவல்துறையின் மறுபக்கத்தை மிகவும் அழுத்தமாக பேசிய தானாகாரன் திரைப்படம் விக்ரம் பிரபுவின் திரை பயணத்தில் மிக முக்கிய படமாக அமைந்தது. முன்னதாக இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படைப்பாக சமீபத்தில் வெளிவந்த பிளக்பஸ்டர் ஹிட்டான பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திலும் பார்த்திபேந்திர பல்லவன் எனும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்தார். 

தொடர்ந்து அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்கள் நடிகர் விக்ரம் பிரபுவின் கைவசம் இருக்கின்றனர். அந்த வகையில் அடுத்ததாக இயக்குனர் ரமேஷ் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்து வருகிறார். பிரபல நடிகை ஈஷா ரெப்பா கதாநாயகியாக நடிக்கும் இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் ரெய்டு திரைப்படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்திருக்கிறார். பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக வர இருக்கும் ரெய்டு திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் முத்தையா அவர்கள் வசனங்களை எழுதி இருக்கிறார். விக்ரம் பிரபுவின் ரெய்டு திரைப்படத்தை வருகிற அக்டோபர் மாதம் 31ம் தேதி வெளியிடப் படக் குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே விக்ரம் பிரபு நடிப்பில் அடுத்த வாரம் ரிலீஸாக இருக்கும் திரைப்படம் தான் பாயும் ஒளி நீ எனக்கு. இயக்குனர் கார்த்திக் அத்வைத் இயக்கத்தில் பாயும் ஒளி நீ எனக்கு படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்க, நடிகை வாணி போஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் தனஞ்ஜெயா மற்றும் விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் பாயும் ஒளி நீ எனக்கு படத்தில் நடித்துள்ளனர். மிகவும் வெளிச்சமான இடத்தில் மட்டுமே கண் பார்வை தெரியும் வெளிச்சம் குறைந்தால் பார்வை மங்கும் என்பது போல கண் பார்வை பாதிப்பு கொண்ட ஒரு நபரின் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் படமாக இயக்குனர் கார்த்திக் அத்வைத் தயாரித்து இயக்கும் பாயும் ஒளி நீ எனக்கு திரைப்படத்திற்கு பரியேறும் பெருமாள் படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, C.S.பிரேம் குமார் படத்தொகுப்பு செய்துள்ளார். இசையமைப்பாளர் சாகர் பாடல்களுக்கு இசையமைக்க, இசையமைப்பாளர்கள் சன்னி மற்றும் சாகித் இணைந்து பின்னணி இசை சேர்த்துள்ளனர். SP சினிமாஸ் நிறுவனம் வெளியிடும் பாயும் ஒளி நீ எனக்கு திரைப்படம் வருகிற ஜூன் 23ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. பாயும் ஒளி நீ எனக்கு படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளிவந்துள்ளது. அதிரடியான அந்த ட்ரெய்லர் இதோ…
 

உதயநிதி ஸ்டாலினின் அதிரடி.. வடிவேலு 2.0..!- மாரி செல்வராஜின் மாமன்னன் ட்ரெய்லர் எப்படி இருக்கு? ரசிகர்களின் விமர்சனங்கள் இதோ
சினிமா

உதயநிதி ஸ்டாலினின் அதிரடி.. வடிவேலு 2.0..!- மாரி செல்வராஜின் மாமன்னன் ட்ரெய்லர் எப்படி இருக்கு? ரசிகர்களின் விமர்சனங்கள் இதோ

மிரள வைக்கும் உதயநிதி ஸ்டாலின் - வடிவேலு - ஃபகத் பாசலின் நடிப்பு... மாமன்னன் பட மிரட்டலான ட்ரெய்லர் இதோ!
சினிமா

மிரள வைக்கும் உதயநிதி ஸ்டாலின் - வடிவேலு - ஃபகத் பாசலின் நடிப்பு... மாமன்னன் பட மிரட்டலான ட்ரெய்லர் இதோ!

சினிமா

"நா ரெடி"- தளபதி விஜயின் பிறந்தநாள் ட்ரீட்டாக வரும் லியோ பட முதல் பாடல்... பக்கா மாஸ் அறிவிப்பால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!