விமர்சனங்களை தாண்டி வசூல் வேட்டையாடும் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ - வைரலாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ரூ 240 கோடி வசூல் வேட்டையாடிய ஆதிபுருஷ் விவரம் உள்ளே - Prabhas adipurush movie crossed 240 crores | Galatta

இந்த ஆண்டின் மிகப்பெரிய பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகி வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. இராமாயணம் இதிகாசத்தை தழுவி ஒரு பகுதியாக எடுக்கபட்ட ஆதிபுருஷ் பட்டதில் ராமனாக பிரபாஸ் நடித்துள்ளார். மேலும் இவருடன் சீதா தேவியாக கீர்த்தி சனொன் ராவணனாக சைஃப் அலிகான் நடிக்க, லட்சுமணன் கதாபாத்திரத்தில் சன்னி சிங் மற்றும் அனுமான் கதாபாத்திரத்தில் தேவதத்தா நாகே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் உருவான  திரைப்படம் ஆதிபுருஷ். T-SERIES FILMS மற்றும் RETROPHILES ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அபூர்வா மோட்டிவாளி சஹை மற்றும் ஆஷிஷ் மட்ரே இணைந்து படத்தொகுப்பு செய்துள்ளனர் மேலும் ஆதிபுரூஷ் படத்திற்கு அஜய் - அதுல் இசையமைத்துள்ளனர்.

ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியான ஆதிபுரூஷ் திரைப்படம் கடந்த ஜூன் 16ஆம் தேதி உலகெங்கும் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸாகியானது. ரசிகர்களின் ஆரவார கொண்டாட்டத்துடன் ஆதிபுருஷ் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் படத்தின் VFX காட்சிகளில் சரியாக வேலை செய்யவில்லை என்றும் சொதப்பி வைத்துள்ளனர் என்று படக்குழுவினரை ரசிகர்களை இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். கலவையான விமர்சனங்கள் நாடு முழுவதும் எழுந்தாலும் விமர்சனங்களை தாண்டி முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிசில் 140 கோடி வசூல் செய்து ஆச்சர்யப் படுத்தியது. இதை அதிகாரபூர்வமாக படக்குழு வெளியிட்டு இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது.

அதை தொடர்ந்து ஆதிபுருஷ் படத்தின் இரண்டாவது நாள் வசூலை அறிவித்துள்ளது படக்குழு. அறிவிப்பின்படி, உலகளவில் ஆதிபுருஷ் திரைப்படம் இரண்டு நாட்களில் ரூ 240 கோடி வசூல் படைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பினை பிரபாஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் படக்குழுவினரின் இந்த அறிவிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

மூன்றாவது நாட்களாக ஆதிபுருஷ் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பதால் விரைவில் ரூ 300 கோடியை தொட்டு விடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. பாகுபலி படத்திற்கு பின் பிரபாஸ் அவருக்கு முழுமையான வெற்றி திரைப்படம் எதுவும் அமையாமல் இருந்தது. இந்நிலையில் மக்களின் ஆதரவை பெற்று ஆதிபுருஷ் திரைப்படம் பிரபாஸுக்கு வசூல் அடிப்படையில் வெற்றிபடமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது

 

Adipurush continues to mesmerise audiences worldwide, surpassing expectations with a bumper opening of ₹140 CR on Day 1, it adds ₹100 CR on Day 2, taking the total collection to a phenomenal ₹240 CR in just two days! Jai Shri Ram 🙏https://t.co/0gHImE23yj#Prabhas @omrautpic.twitter.com/EOCb2GroSQ

— T-Series (@TSeries) June 18, 2023

 

சைக்காலஜிக்கல் திரில்லர் கதைகளத்தில் மிரட்டும் வசந்த் ரவி.. – வெளியானது அஸ்வின்ஸ் பட டிரைலர்..!
சினிமா

சைக்காலஜிக்கல் திரில்லர் கதைகளத்தில் மிரட்டும் வசந்த் ரவி.. – வெளியானது அஸ்வின்ஸ் பட டிரைலர்..!

“பெரியார், அம்பேத்கருடன் அண்ணாவையும் படியுங்கள்..!” தளபதி விஜய் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்த இயக்குனர் வெற்றிமாறன்..!
சினிமா

“பெரியார், அம்பேத்கருடன் அண்ணாவையும் படியுங்கள்..!” தளபதி விஜய் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்த இயக்குனர் வெற்றிமாறன்..!

“பழகுதலும்.. விலகுதலும்..” ஏ ஆர் ரஹ்மான் ரசிகர்களை வருத்தமடைய செய்த இரா. பார்த்திபன்.. – இணையத்தில் வைரலாகும் பதிவு.!
சினிமா

“பழகுதலும்.. விலகுதலும்..” ஏ ஆர் ரஹ்மான் ரசிகர்களை வருத்தமடைய செய்த இரா. பார்த்திபன்.. – இணையத்தில் வைரலாகும் பதிவு.!